எங்கேயும், எப்படியும் ஓட்டுவதற்கான சூப்பர் சைக்கிள்!
Motorized bicycles என்றழைக்கப்படும் மோட்டார் பொருத்தப்பட்ட சைக்கிள்கள் மலைப்பாதைகள் மற்றும் கரடு முரடான சாலைகளில் எளிதாக செல்லும் வகையில் வடிவமைக்கப்படுகின்றன. ஏற்றமான சாலைகளில் சைக்கிளை மிதிப்பதற்கு சிரமமாக இருக்கும்போது மோட்டார் துணையுடன் எளிதாக செல்லலாம்.
இதுபோன்ற கான்செப்ட்டுடன் வடிவமைக்கப்பட்டிருக்கும் சைக்கிள்தான் மோட்டோபெட். காம் வுட்ஸ் என்ற டிசைனர் வடிவமைத்திருக்கும் இந்த பைக் கிக்ஸ்டார்ட்டர்ஸ் என்ற திட்ட நிதி பங்களிப்பு தளம் மூலமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அசெம்பிள்
இந்த பைக்கை பெரிய அளவில் உற்பத்தி செய்யும் அளவுக்கு நிதி ஆதாரம் இல்லை. எனவே, கிக்ஸ்டார்ட்டர் தளம் மூலமாக விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. தேவைப்படுவோர் ஆர்டர் செய்து பாகங்களாக பெற்று கையேடு மூலம் சொந்தமாக அசெம்பிள் செய்து கொள்ளலாம்.

பல்வகை பயன்பாடு
மலையேற்றம் மற்றும் கரடு முரடான மற்றும் சேறு சகதி நிறைந்த சாலைகளில் பயன்படுத்தும் வகையிலான பல்வகை பயன்பாட்டு அம்சங்களையும் இது கொண்டிருக்கிறது. படத்தில் சில பிட் பைக்குகளின் மாடல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

பிரத்யேக பாகங்கள்
ஃபிரேம், ஸ்விங் ஆர்ம், ஸ்பிராக்கெட், புகை போக்கி உள்ளிட்ட பல பாகங்கள் இந்த பைக்குக்கு தேவையான விதத்தில் கஸ்டமைஸ் செய்யப்பட்டுள்ளன.

ஹோண்டா எஞ்சின்
இந்த பைக்கில் ஹோண்டா எக்ஸ்ஆர்50 பிட் பைக்கின் எஞ்சின்தான் பொருத்தப்பட்டுள்ளது. ஹோண்டா பிட் பைக்குகளின் 50சிசி முதல் 190சிசி திறன் வரையிலான எஞ்சின்களில் ஒன்றை பொருத்துவதற்கு இதன் வடிவமைப்பாளர்கள் பரிந்துரைத்துள்ளனர். குறைவான விலையில் கிடைக்கும் சீன பிட் பைக் எஞ்சினை கூட வாங்கிப் பொருத்திக் கொள்ளலாம்.

இதர பாகங்கள்
பிட் பைக்குக்கான பாகங்கள் தவிர மலையேற்ற சைக்கிள்களில் பயன்படுத்தப்படும் ஃபோர்க், சக்கரங்கள், டயர்கள், பின்புற ஷாக்அப்சார்பர், பெடல்கள் ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளன. அசெம்பிள் செய்வதற்கு இவற்றை தனியாக வாங்கிக் கொள்ளலாம்.

பிட் பைக் பாகங்கள்
மலையேற்ற சைக்கிளுக்கான பாகங்கள் தவிர எஞ்சின், பெட்ரோல் டேங்க், பிளாஸ்ட்டிக்குகள் ஆகியவை பிட் பைக் பாகங்களாக இருக்கின்றன.

காப்புரிமை
பெடல் மற்றும் எஞ்சினிலிருந்து வரும் ஆற்றலை பின்புற சக்கரத்திற்கு ஒரே சங்கிலியில் கடத்துவதற்கான அமைப்பு கொண்ட டிரைவ் சிஸ்டத்திற்கு காப்புரிமை பெறப்பட்டுள்ளது. பிற மாடல்களில் தனித்தனியாக இருக்கும்.
வீடியோ
இந்த பைக்கின் வியக்க வைக்கும் செயல்பாடுகளை கண்டு ரசிக்க காணொளி இணைப்பை சொடுக்குங்கள். 2வது நிமிடத்திலிருந்து உங்களை சிலிர்க்க வைக்கும்.


Click it and Unblock the Notifications








