அடுத்து களமிறக்கும் புதிய ஜப்பானிய டூ வீலர் பிராண்டு!
இந்திய மார்க்கெட்டில் ஜப்பானிய இருசக்கர வாகன நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகம். ஹோண்டா, யமஹா, சுசூகி என இந்திய மார்க்கெட்டில் இந்த நிறுவனங்கள் நீக்கமற நிறைந்துவிட்டன. மேலும், விற்பனையிலும் முக்கிய இடங்களை இந்த நிறுவனங்கள் பிடித்துள்ளதால் அங்கு என்னமோ இருக்கிறது என்ற ரீதியில் ஜப்பானை சேர்ந்த மற்றுமொரு டூவீலர் நிறுவனம் இந்தியாவில் கால் பதிக்க உள்ளது.
ஓஷிரோ என்ற அந்த நிறுவனம் இந்தியாவை சேர்ந்த நிறுவனத்தின் கூட்டணியுடன் 100சிசி முதல் 150சிசி ரகங்களில் புதிய பைக் மாடல்களையும், 125சிசி முதல் 150சிசி வரையிலான திறன் கொண்ட ஸ்கூட்டர்களையும் அறிமுகப்படுத்த உள்ளது. விற்பனை ஒருபக்கம் இருந்தாலும் வாடிக்கையாளர் சேவை என்பது மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இதனை வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்பையும் தாண்டி முழுமையாக நிறைவேற்றுவோம் என்கிறது ஓஷிரோ.

இந்திய வாடிக்கையாளர்களின் எண்ணங்கள், எதிர்பார்ப்புகளை மிக ஆழமாக ஊடுருவி நாடி பிடித்து பார்த்திருப்பதோடு, எங்களது தரமான தயாரிப்புகளும், வாடிக்கையாளர் சேவையும் நிச்சயம் இந்திய மார்க்கெட்டில் உரிய இடத்தை பிடிப்போம்,"என்று நம்பிக்கை தெரிவிக்கிறது ஓஷிரோ.
மஹாராஷ்டிர மாநிலம், சாதராவில் கட்டப்பட்டு வரும் ஆலையில் ஓஷிரோவின் பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள் தயாரிக்கப்பட உள்ளதால் விலையும் போட்டியாளர்களுக்கு சவால் கொடுக்கும் வகையில் இருக்கும் என்கின்றன தகவல்கள். ஆகஸ்ட்டில் இந்த ஆலையில் உற்பத்தி துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்திய வாடிக்கையாளர்கள் முதன்முறையாக புதுமையான சேவைகள் மற்றும் சலுகைகளை முதன்முறையாக பெறப்போகின்றனர் என்றும் ஓஷிரோ தெரிவித்துள்ளது. நாட்டின் முக்கிய நகரங்களில் டீலர்களை நியமிக்கும் பணிகளை இந்த நிறுவனம் துவங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








