விரைவில் வரும் புதிய வெஸ்பா ஸ்கூட்டர் - விபரம்

வெஸ்பா எல்எக்ஸ்125 ஸ்கூட்டரின் கூடுதல் சிறப்பம்சங்கள் கொண்ட வெஸ்பா விஎக்ஸ்125 ஸ்கூட்டரை சமீபத்தில் விற்பனைக்கு கொண்டு வந்தது பியாஜியோ. அடுத்ததாக வெஸ்பா 946 என்ற பிரிமியம் ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது.

இதனிடையே, வெஸ்பா எஸ் என்ற புதிய ஸ்கூட்டரையும் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக பியாஜியோ தெரிவித்துள்ளது. இந்த புதிய ஸ்கூட்டர் தற்போது விற்பனையில் இருக்கும் வெஸ்பா எல்எக்ஸ் மற்றும் விஎக்ஸ் மாடல்களையொட்டிதாகவே இருக்கும்.

 வித்தியாசம்

வித்தியாசம்

தோற்றத்தை பொறுத்தவரை வெஸ்பா எல்எக்ஸ்125 ஸ்கூட்டரை போன்றே வெஸ்பா எஸ் இருக்கும். ஆனால், ஹெட்லைட் மட்டும் வட்ட வடிவத்திற்கு பதில் செவ்வக வடிவில் இருக்கும்.

இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர்

இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர்

இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரும் மாற்றம் கண்டிருக்கும். அனலாக் ஸ்பீடோமீட்டர் மற்றும் எரிபொருள் மானியையும், டிஜிட்டல் கடிகாரத்தையும் கொண்டிருக்கும்.

எஞ்சின்

எஞ்சின்

சர்வதேச அளவில் சில மார்க்கெட்டுகளில் வெஸ்பா எஸ் ஸ்கூட்டர் 150சிசி எஞ்சினுடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால், இந்தியாவில் வெஸ்பா எல்எக்ஸ் 125 ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டிருக்கும் அதே சிங்கிள் சிலிண்டர் 125சிசி எஞ்சினுடன் வர உள்ளது. 10 எச்பி சக்தியை வெளிக்கொணரும் திறன் கொண்ட எஞ்சினுடன் சிவிடி டிரான்ஸ்மிஷன் இணைந்து செயலாற்றும்.

சஸ்பென்ஷன்

சஸ்பென்ஷன்

பின்புறத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷனும், முன்னால் ஒரு புறத்தில் மட்டும் ஹைட்ராலிக் சஸ்பென்ஷன் செட்டிங் மற்றும் வெஸ்பாவின் மோனோகாக் சேஸீயுடன் புதிய வெஸ்பா எஸ் ஸ்கூட்டர் வருகிறது.

 விற்பனை

விற்பனை

வரும் டிசம்பரில் இந்த புதிய வெஸ்பா ஸ்கூட்டர் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 17, 2013, 15:41 [IST]
English summary
It is now clear that Piaggio is gradually looking to increase the presence of its Vespa brand in India. The LX125 was the first to debut last year and only recently, the VX125, a different variant sporting a front disc was launched. Now, the Italian premium scooter manufacturer has confirmed a new model - Vespa S for India.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+