புதிய 150சிசி ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த பியாஜியோ ஆயத்தம்
வெஸ்பா எல்எக்ஸ் 125 ஸ்கூட்டர் மூலம் மார்க்கெட்டில் நல்ல அறிமுகத்தை பெற்றுவிட்டது பியாஜியோ. இதைத்தொடர்ந்து, தற்போது புதிய 150 சிசி திறன் கொண்ட பவர்ஃபுல் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்துகிறது பியாஜியோ. பியாஜியோ அறிமுகப்படுத்த இருக்கும் தைபூன் ஸ்கூட்டர் சர்வதேச மார்க்கெட்டில் 125சிசி எஞ்சினுடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆனால், 125 சிசி திறன் கொண்ட ஸ்கூட்டர்களும், பெண்களுக்கான ஸ்கூட்டர் மாடல்களும் நிரம்பி வழியும் இந்திய மார்க்கெட்டில் மேலும் ஒரு 125 சிசி ஸ்கூட்டரை நிலைநிறுத்தினால் அது எடுபடாது. வெஸ்பா எல்எக்ஸ் 125 ஸ்கூட்டரின் மார்க்கெட்டையும் உடைக்கும் அபாயம் உண்டு. எனவே, ஃப்ளை ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டிருக்கும் 150 சிசி எஞ்சினை இந்த ஸ்கூட்டரில் பொருத்தி விற்பனைக்கு கொண்டு வருகிறது பியாஜியோ. கூடுதல் தகவல்கள் மற்றும் அறிமுக விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

தோற்றம்
இதன் முகப்பு, டயர்கள் மற்றும் பின்புற தோற்றம் பிற ஸ்கூட்டர் மாடல்களிலிருந்து மாறுபட்டு ஆண்களை வசீகரிக்கும் வகையில் டிசைன் செய்யப்பட்டுள்ளது.

எஞ்சின்
11.4 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 150சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். எனவே, இந்த ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டால், மார்க்கெட்டில் இருக்கும் பவர்ஃபுல் ஸ்கூட்டர் மாடல் இதுவாகத்தான் இருக்கும்.

எம்பிஎஃப்ஐ தொழில்நுட்பம்
மார்க்கெட்டில் அறிமுகமாக இருக்கும் முதல் எம்பிஎஃப்ஐ (மல்டி பாயிண்ட் ஃபியூவல் இன்ஜெக்ஷன்) தொழில்நுட்பம் கொண்ட எஞ்சினுடன் வரும் முதல் ஸ்கூட்டர் தைபூன்.

மைலேஜ்
சிவிடி டிரான்ஸ்மிஷனுடன் வரும் இந்த ஸ்கூட்டர் லிட்டருக்கு 32 கிமீ மைலேஜ் தரும் என பியாஜியோ தெரிவிக்கிறது. மேலும், இருக்கைக்கு கீழே பொருட்களை வைக்க தாராள இடவசதியையும் கொண்டிருக்கும்.

டாப் ஸ்பீடு
அதிகபட்சமாக மணிக்கு 100 கிமீ வேகம் வரை செல்லும் ஆற்றல் வாய்ந்த ஸ்கூட்டராக இருக்கும்.

டிஸ்க் பிரேக்
முன்புறத்தில் டிஸ்க் பிரேக்கும், பின்புற சக்கரத்தில் டிரம் பிரேக்கும் பொருத்தப்பட்டிருக்கும். 7 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டுள்ளது.

அறிமுகம் மற்றும் விலை விபரம்
இந்த ஆண்டு மத்தியில் தைபூன் ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகப்படுத்த பியாஜியோ திட்டமிட்டுள்ளது. ரூ.85,000 ஆரம்ப விலையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








