மறு பிறவி எடுத்த ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி!

1960களில் இங்கிலாந்தில் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் மோட்டார்சைக்கிளின் விற்பனை கடுமையான வீழ்ச்சி கண்டு வந்தது. ஜப்பானிய மற்றும் பிற ஐரோப்பிய மோட்டார்சைக்கிள் நிறுவனங்களின் போட்டிகளால் ராயல் என்ஃபீல்டு வர்த்தகமும் நிலை குலையத் துவங்கியது. இந்த சரிவிலிருந்து மீளவும், போட்டியாளர்களை எதிர்கொள்ளும் விதத்தில் புதிய மோட்டார்சைக்கிளை களமிறக்க ராயல் என்ஃபீல்டு முடிவு செய்தது.

அப்போதைய நிலையில், சாதாரண பைக்குகளை கஃபே ரேஸர் ரகத்தில்ள் மாறுதல்களை செய்து ஓட்டுவதில் இளைஞர்கள் அலாதி ஆர்வம் காட்டினர். இந்த ஆர்வத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு மார்க்கெட்டில் எழுச்சி பெற ஒரு கஸ்டமைஸ் மோட்டார்சைக்கிள் மாடலை தயாரித்து விட ராயல் என்ஃபீல்டு திட்டமிட்டது. அவ்வாறு உருவான மாடல்தான் கான்டினென்டல் ஜிடி.

 அடிப்படை மாடல்

அடிப்படை மாடல்

ராயல் என்ஃபீல்டின் க்ரூசேடர் என்ற 250சிசி மோட்டார்சைக்கிளை மாற்றி வடிவமைக்கப்பட்ட கஃபே ரேஸர் ரகத்திலான மோட்டார்சைக்கிள்தான் கான்டினென்டல் ஜிடி. வித்தியாசமான ஸ்டைலில் வந்த இந்த புதிய மோட்டார்சைக்கிள் இளைஞர்களை வெகுவாக கவர்ந்திழுத்தது.

இன்னொரு காரணம்

இன்னொரு காரணம்

அந்த காலக்கட்டத்தில் இங்கிலாந்தில் 250சிசி வரை திறன் கொண்ட மோட்டார்சைக்கிள்களை ஓட்டுவதற்கு ஓட்டுனர் தேர்வில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயமில்லை. இதுவும் 250சிசி எஞ்சினுடன் கான்டினென்டல் ஜிடி., அறிமுகம் செய்வதற்கான முக்கிய காரணமாக அமைந்தது.

ரெடிமேட் மாடல்

ரெடிமேட் மாடல்

அங்கும் இங்கும் அலைந்து ஆக்சஸெரீஸ்களை வாங்கி, மெக்கானிக் ஒருவரை பிடித்து ஆகும் வீண் காலதாமதங்களால் பெரிதும் நொந்து போயிருந்த பிரிட்டன் இளைஞர்களுக்கு வாயிலே ஜிலேபி வந்து விழுந்தது போன்று கான்டினென்டல் ஜிடி வந்தது. ஷோரூமிலிருந்து நேரடியாக ஒரு கஸ்டமைஸ் மோட்டார்சைக்கிளை வாங்கிக்கொள்வதற்கான வாய்ப்பும், ஸ்டைலிலும் வித்தியாசமாக ஜிடி.,க்கு அப்போது வரவேற்பு கிட்டியது.

 எஞ்சின்

எஞ்சின்

பழைய கான்டினென்டல் ஜிடி மோட்டார்சைக்கிளில் 21 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 250சிசி எஞ்சினும், 5 ஸ்பீடு டிரான்ஸ்மிஷனும் பொருத்தப்பட்டு இருந்தது. அப்போது இந்த மோட்டார்சைக்கிளின் எஞ்சின் பவர் வாடிக்கையாளர்களில் வெகுவாக சிலாகித்து கூறப்பட்டது.

ஒரு விளம்பரம்

ஒரு விளம்பரம்

1965ல் அறிமுகமான ஜிடி கஃபே ரேஸரை பிரலப்படுத்துவதற்கு 1964ம் ஆண்டு இறுதியிலான குளிர்காலத்தை தனக்கு சாதகமாக்கிக் கொண்டது ராயல் என்ஃபீல்டு. ஜான் ஓ குரோட்ஸ் என்ற இடத்திலிருந்து லேண்ட்ஸ் என்ட் என்ற இடத்திற்கு சாகச யாத்திரை ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது. அடர்ந்த பனி படர்ந்த சில்வர்ஸ்டோன் ரேஸ் டிராக் வழியாக இந்த சாகச யாத்திரையை ஜான் கூப்பர் என்பவர் கான்டினென்டல் ஜிடி.,யில் மேற்கொண்டார். சராசரியாக மணிக்கு 113.121 கிமீ வேகத்தில் இந்த சாகச யாத்திரையை கஃபே ரேஸர் மோட்டார்சைக்கிளில் கடந்தார் ஜான் கூப்பர். மொத்தம் 22 மணி நேரம் 20 நிமிடங்கள் இந்த பயணம் நீடித்தது.

 நாளிதழ் விளம்பரம்

நாளிதழ் விளம்பரம்

இந்த செய்தியை நாளிதழ்களில் அரை பக்க விளம்பரமாக வெளியிட்டது ராயல் என்ஃபீல்டு. 'பிரிட்டனின் அதிவேக 250' மோட்டார்சைக்கிள் என்ற தலைப்பில் வெளியான இந்த விளம்பரம் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

விலை

விலை

போட்டி நிறைந்திருந்தபோதும் குறைந்த விலை மோட்டார்சைக்கிளாக ஜிடி அறிமுகம் செய்யப்படவில்லை. அந்த மாடலின் மீது அதீத நம்பிக்கை கொண்ட ராயல் என்ஃபீல்டு நிறுவனம் 250 பவுண்ட் விலையில் விற்பனைக்கு கொண்டு வந்தது. இருந்தாலும், இளைஞர்களின் கனவு மோட்டார்சைக்கிளாக இது மாறியதால் விலை ஒரு பொருட்டாக பேசப்படவில்லை.

அதே பாணியில்

அதே பாணியில்

ராயல் என்ஃபீல்டு தயாரிப்புகளின் மீது ஒரு பெரிய எதிர்பார்ப்பு வாடிக்கையாளர்களுக்கு உண்டு. அதனை நிறைவு செய்யும் விதமாக ஒரு புத்தம் புதிய மோட்டார்சைக்கிளை வழங்க எண்ணிய ராயல் என்ஃபீல்டுக்கு கான்டினென்டல் ஜிடி நினைவு வந்துவிட்டது.

புதிய சட்டை

புதிய சட்டை

பழைய ஜிடி மோட்டார்சைக்கிளின் ஸ்டைலை அப்படியே எடுத்துக் கொண்டு புதுமையான தொழில்நுட்பங்களுடன் தற்போது புதிய கான்டினென்டல் ஜிடியாக மாற்றியுள்ளது ராயல் என்ஃபீல்டு. பெட்ரோல் டேங்க், கைப்பிடி, இருக்கை அமைப்பு உள்ளிட்டவை பழைய கஃபே ரேஸர் மாடலிலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது. அதேவேளை, பிரேக், சஸ்பென்ஷன் அமைப்பு, டயர்கள் உள்ளிட்டவை புதியது.

 பழசு, புதுசு

பழசு, புதுசு

பழைய கஃபே ரேஸர் மாடலில் ஃபைபர் கிளாஸ் பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டிருந்தது. தற்போது ஸ்டீல் பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டுள்ளது. புதிய கஃபே ரேஸர் நிச்சயம் புதிய ஓட்டுதல் அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால், எல்லா தரப்பு வாடிக்கையாளர்களையும் கவர்ந்துவிடும் என்று கூறுவதற்கில்லை.

ஆதங்கம்

ஆதங்கம்

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் அதிசக்தி வாய்ந்த மோட்டார்சைக்கிளாக கூறப்பட்டாலும், உச்சக்கட்டமாக மணிக்கு 160 கிமீ வேகத்தை எட்டுவதற்கான தகவமைப்பு இந்த மோட்டார்சைக்கிளில் இல்லை. பழைய மாடல் 250சிசி எஞ்சினுடன் வந்த நிலையில், புதிய கான்டினென்டல் ஜிடி மோட்டார்சைக்கிளில் 535சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 29.1 பிஎச்பி பவரை மட்டுமே அளிக்கும் திறன் கொண்டதாக இருக்கிறது. இந்த எஞ்சினை கூடுதல் பவர் கொண்டதாக ராயல் என்ஃபீல்டு கொண்டு வந்திருக்கலாம் என்ற ஆதங்கம் இருக்கிறது. ஸ்டைலில் சிறப்பான மோட்டார்சைக்கிளாக இருந்தாலும், பவர் போதுமானதாக இல்லை என்ற ஆதங்கத்தை தருகிறது புதிய கான்டினென்டல் ஜிடி.

பிராண்டு மதிப்பு

பிராண்டு மதிப்பு

சிறப்பான தோற்றம் கொண்ட ராயல் என்ஃபீல்டு தயாரிப்புகள் வாடிக்கையாளர் மத்தியில் ஒருவித ஈர்ப்பை தக்க வைத்து வருகின்றன. அதனை இந்த புதிய மோட்டார்சைக்கிள் தக்க வைக்குமா என்பதை அடுத்த சில மாதங்களின் விற்பனையில் தெரிந்துவிடும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, December 10, 2013, 13:40 [IST]
English summary
It was the 1960s and thoroughbred motorcycles from the iconic U.K motorcycle manufacturer, Royal Enfield were in decline. Large motorcycle companies from Japan and even from mainland Europe were taking over the motorcycling scene in the U.K and Royal Enfield had to come up with a plan to revive itself and a solution was right in RE's backyard. U.K's rich cafe racing culture.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+