புல்லட்டுக்கு 1000சிசி எஞ்சினை உருவாக்கிய இளைஞர்

புல்லட்டில் சொந்தமாக உருவாக்கிய 1000சிசி எஞ்சினை பொருத்தி அசத்தியிருக்கிறார் அமெரிக்காவில் வாழ் இந்திய இளைஞரான அனிகேத் வர்தன்.

உலகின் ஒவ்வொரு மூலையிலும் ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள்களுக்கு ரசிகர்கள் இருக்கின்றனர். அதில் ஒருவர்தான் அனிகேத் வர்தன். டெல்லியை சேர்ந்த ஆர்க்கிடெக்ட்டான இவர் ஒருமுறை ஹார்லி டேவிட்சன் பைக்கின் சப்தத்தை கேட்டு வியந்திருக்கிறார். ஆனால், தனது ராயல் என்பீல்டு மீதுள்ள பிரியத்தை விட்டுக் கொடுக்க மனமில்லை.

இந்த நிலையில், 1999ல் அமெரிக்கா சென்றார். இருப்பினும், ஹார்லிக்கு இணையாக புல்லட்டை உருவாக்க உறுதிபூண்டார். 2003ல் டெல்லி வந்தபோது தனது புல்லட்டின் பழைய 350சிசி எஞ்சினை கையோடு அமெரிக்கா எடுத்துச் சென்றார். கடும் முயற்சிகளுடன் வார இறுதி நாட்களில் புல்லட்டுக்கான பவர்ஃபுல் எஞ்சினை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

இதன் பயனாக தற்போது 998 சிசி திறன் கொண்ட பவர்ஃபுல் எஞ்சினை புல்லட்டுக்கு உருவாக்கி பொருத்தியுள்ளார். புல்லட் மஸ்கேட் வி டிவிஎன் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த மோட்டார்சைக்கிளில் இரட்டை ஹெட் கொண்ட இந்த வி டிவின் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இதன் பிரத்யேக அம்சமே, பிற எஞ்சின்களை காட்டிலும் இந்த எஞ்சினில் அதிர்வுகள் மிக குறைவாக இருப்பதுதான். இதற்காக, பல மாற்றங்களை செய்துள்ளார் அனிகேட்.

750சிசி மற்றும் 1000 சிசி மோட்டார்சைக்கிள் மாடல்கள் ராயல் என்பீல்டின் எதிர்கால திட்டத்தில் இருப்பதாக முன்பு செய்தி வெளியிட்டிருந்தோம். இந்த நிலையில், இந்த செய்தியை உண்மையாக்கும் விதமாக புதிய 1000 சிசி புல்லட்டை உருவாக்கி அசத்தியிருக்கிறார் அனிகேட்.

1000சிசி புல்லட் - படங்கள்

1000சிசி புல்லட் - படங்கள்

1000சிசி புல்லட் - படங்கள்

1000சிசி புல்லட் - படங்கள்

1000சிசி புல்லட் - படங்கள்

1000சிசி புல்லட் - படங்கள்

1000சிசி புல்லட் - படங்கள்

1000சிசி புல்லட் - படங்கள்

1000சிசி புல்லட் - படங்கள்

1000சிசி புல்லட் - படங்கள்

1000சிசி புல்லட் - படங்கள்

1000சிசி புல்லட் - படங்கள்

1000சிசி புல்லட் - படங்கள்

1000சிசி புல்லட் - படங்கள்

1000சிசி புல்லட் - படங்கள்

1000சிசி புல்லட் - படங்கள்

1000சிசி புல்லட் - படங்கள்

1000சிசி புல்லட் - படங்கள்

1000சிசி புல்லட் - படங்கள்

1000சிசி புல்லட் - படங்கள்

More from DriveSpark

Article Published On: Tuesday, January 29, 2013, 14:16 [IST]
English summary
Royal Enfield motorcycle enthusiast are found in every corner of the world. Aniket Vardhan is one special enthusiast. He has custom built his own engine, for his royal enfield motorcycle.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+