இங்கிலாந்தில் முதலில் அறிமுகமாகும் கான்டினென்டல் ஜிடி!

இந்தியாவில் படு தீவிரமாக சோதனை செய்யப்பட்டு வரும் ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி மோட்டார்சைக்கிள் முதலில் இங்கிலாந்தில் விற்பனைக்கு வர இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது..

ஓவர்டிரைவ் ஆட்டோமொபைல் இதழின் ஆசிரியர் பெர்ட்ரான்ட் டிசோஸா இந்த தகவலை டிவிட்டரில் தெரிவித்துள்ளார். இது ராயல் என்ஃபீல்டின் முற்றிலும் புதிய பைக்காக வருவதால் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

 சென்னையில் உற்பத்தி

சென்னையில் உற்பத்தி

சென்னை, ஒரகடத்தில் அமைக்கப்பட்டிருக்கும் புதிய ஆலையில் இந்த புதிய மோட்டார்சைக்கிள் உற்பத்தி செய்யப்பட உள்ளது. இந்த பைக் மட்டுமின்றி பிற மாடல்களும் இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்பட உள்ளதால், ராயல் என்ஃபீல்டு பைக்குகளுக்கான நீண்ட காத்திருப்பு காலம் வெகுவாக குறையும்.

எஞ்சின்

எஞ்சின்

இந்த புதிய மோட்டார்சைக்களில் 535சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். எஞ்சின் பவர், டார்க் உள்ளிட்ட இதர தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

கஃபே ரேஸர்

கஃபே ரேஸர்

கஃபே ரேஸர் ரகத்தில் பிரத்யேக டிசைனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஹேண்டில்பார், பெட்ரோல் டேங்க், ஒற்றை இருக்கை என அனைத்தும் வித்தியாசமான தோற்றத்துடன் வசீகரிக்கிறது.

அதிவேக மோட்டார்சைக்கிள்

அதிவேக மோட்டார்சைக்கிள்

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் அதிவேக மற்றும் குறைந்த எடை கொண்ட மோட்டார்சைக்கிள் மாடலும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

பெர்ட்ரான்ட் டிசோஸா டிவீட்

பெர்ட்ரான்ட் டிசோஸா டிவீட்

ஓவர்டிரைவ் இதழ் ஆசிரியர் பெர்ட்ரான்ட் டிசோஸா வெளியிட்ட டிவிட்டர் செய்தியை காணலாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, July 27, 2013, 10:22 [IST]
English summary
Chennai based premium bike manufacturer Royal Enfield is all set to Launch Continental GT in UK market by September this year.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+