கார் மாதிரி உட்கார்ந்து ஓட்டுவதற்கான ஓர் மோட்டார்சைக்கிள்!

காரில் அமர்ந்து ஓட்டிச் செல்வது போன்ற சொகுசு மோட்டார்சைக்கிள்களில் கிடைப்பது இல்லை. முதுகுவலி, களைப்பு ஆகியவற்றால் மோட்டார்சைக்கிள் பயணம் எப்போதும் சவாலானதாகவே இருந்து வருகிறது.

இந்த குறையை போக்கும் விதத்தில் கார் போன்று உட்கார்ந்து ஓட்டிச் செல்லும் வசதி கொண்ட வித்தியாசமான இருசக்கர வாகனம் ஒன்றை வாஷிங்டனை சேர்ந்த சுப்ரீன் என்ற நிறுவனம் வடிவமைத்துள்ளது. எக்ஸோடஸ் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த புதிய மோட்டார்சைக்கிளின் கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

 கஸ்டம் பில்ட்

கஸ்டம் பில்ட்

பிஎம்டபிள்யூ கே1200எல்டி டூரிங் ரக மோட்டார்சைக்கிளைத்தான் சுப்ரீன் நிறுவனம் இதுபோன்று கஸ்டமைஸ் செய்து மாற்றியுள்ளது.

சிங்கிள் சீட்டர்

சிங்கிள் சீட்டர்

எக்ஸோடஸ் மோட்டார்சைக்கிளில் பொருத்தப்பட்டிருக்கும் சாய்மான இருக்கையில் ஒருவர் மட்டுமே அமர்ந்து செல்ல முடியும்.

நீளம்...

நீளம்...

குறைந்த தரை இடைவெளியுடன், 12.5 அடி நீளம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தரையிலிருந்து 7 இஞ்ச் உயரத்தில்தான் ஓட்டுபவர் அமர்ந்திருப்பார்.

எடை

எடை

இந்த புதிய மோட்டார்சைக்கிள் 308 கிலோ எடை கொண்டது.

 டிரான்ஸ்மிஷன்

டிரான்ஸ்மிஷன்

ரிவர்ஸ் கியருடன் கூடிய 5 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டிருக்கிறது.

எஞ்சின்

எஞ்சின்

பிஎம்டபிள்யூ கே1200எல்டி டூரிங் பைக்கில் பொருத்தப்பட்டிருக்கும் அதே 1172சிசி எஞ்சின்தான் இந்த மோட்டார்சைக்கிளிலும் செயல்புரிகிறது. இந்த எஞ்சின் 126 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும்.

பெர்ஃபார்மென்ஸ்

பெர்ஃபார்மென்ஸ்

0-96 கிமீ வேகத்தை வெறும் 4.1 வினாடிகளிலும், மணிக்கு அதிகபட்சமாக 241கிமீ வேகத்திலும் செல்லும் திறன் கொண்டது.

சிறந்த பேலன்ஸ்

சிறந்த பேலன்ஸ்

இந்த மோட்டார்சைக்கிளின் குறைந்த தரை இடைவெளி, வைன்ட்ஷீல்டு ஆகியவை குறைந்த புவியீர்ப்பு மைய விசை கொடுப்பதால் சிறப்பான சமநிலையுடன் செல்லும்.

மைலேஜ்

மைலேஜ்

பார்க்க பிரம்மாண்டமாக இருக்கும் இந்த மோட்டார்சைக்கிளின் ஏரோடைனமிக்ஸ் டிசைன் மூலம் அதிக மைலேஜ் கிடைக்கும். 88.5 கிமீ சராசரி வேகத்தில் லிட்டருக்கு 34 கிமீ மைலேஜ் கொடுப்பதாக சுப்ரீன் தெரிவித்திருக்கிறது.

 பாதுகாப்பு குறைபாடுகள்

பாதுகாப்பு குறைபாடுகள்

குறைந்த வேகத்தில் செல்லும்போது இந்த மோட்டார்சைக்கிளில் விபத்து நிகழ்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ஒருவேளை, விபத்து நிகழ்ந்தால் உள்ளே அமர்ந்திருப்பவர் வெளியே வருவதிலும் சிக்கல் இருக்கிறது.

 கான்செப்ட் நிலை

கான்செப்ட் நிலை

கான்செப்ட் நிலையில்தான் இந்த மோட்டார்சைக்கிள் இருக்கிறது.முந்தைய ஸ்லைடரில் குறிப்பிட்ட போன்ற சில பாதுகாப்பு குறைபாடுகளை களைந்தால் மட்டுமே அடுத்த நிலையை எட்ட முடியும்.

More from DriveSpark

Article Published On: Saturday, July 27, 2013, 12:02 [IST]
English summary
Washington based Suprene is currently working on a new two wheeler design, which happens to be the only vehicle on offer from them. It is called the Exodus and its a recumbent motorcycle. In other words, the rider virtually lies down on his back while riding the bike.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+