இந்தியாவில் அறிமுகமாகும் சுஸுகியின் புதிய 250சிசி பைக்!!

By Saravana

அடுத்த மாதம் புதிய இனசுமா 250சிசி பைக்கை சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது. இதனை அந்த நிறுவனத்தின் துணை செயல் தலைவர் அதுல் குப்தா தெரிவித்துள்ளார்.

நேக்டு ஸ்டைல் கொண்ட இந்த இனசுமா 250சிசி பைக் இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சுஸுகி நிறுவனம் இனசுமாவை களமிறக்குவதை தாமதப்படுத்தி வந்தது.

Suzuki Inazuma 250

இந்த நிலையில், இந்த புதிய பைக்கின் அறிமுகம் உறுதியாகியுள்ளது. இந்த புதிய 250சிசி பைக்கில் 26 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் ட்வின் சிலிண்டர் லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

குர்கானில் உள்ள ஆலையில் பாகங்களாக தருவிக்கப்பட்டு அசெம்பிள் செய்யப்படும். தற்போது 250சிசி மார்க்கெட்டில் அதிக மாடல்கள் இருப்பதால் கடும் போட்டி இருக்கிறது. இந்த புதிய பைக்கின் விலையை பொறுத்தே விற்பனை அமையும்.

இந்த புதிய பைக் தவிர்த்து டெல்லி ஆட்டோ எக்ஸ்போவிலும் புதிய மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாகவும் அதுல் குப்தா தெரிவித்தார். பைக் மற்றும் ஸ்கூட்டர் என இரண்டு மார்க்கெட்டிலும் சமமாக கவனம் செலுத்துவோம் என்றும் அவர் தெரிவித்தார்.

More from DriveSpark

Article Published On: Saturday, December 14, 2013, 16:05 [IST]
English summary
Suzuki Motorcycle India Limited was rumored to launch its 250cc segment naked street motorcycle, the Inazuma 250 in India earlier this year. But that never happened. Now, official confirmation about the same has come from Atul Gupta, executive vice-president, SMIL himself.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+