உலக சூப்பர்பைக் சாம்பியன்ஷிப் போட்டியில் நுழையும் ஹீரோ!!
2014 வேர்ல்டு சூப்பர்பைக் சாம்பியன்ஷிப் போட்டியில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அமெரிக்காவின் எரிக் புயெல் நிறுவனத்துடன் இணைந்து பங்கேற்கிறது.
டீம் ஹீரோ இபிஆர் என்ற பெயரிலான ஹீரோ மோட்டோகார்ப் அணி இபிஆர் 1190இஎக்ஸ் பைக்குகளை பயன்படுத்தும். மேலும், ஆரோன் யேட்ஸ் மற்றும் ஜாஃப் மே ஆகியோவர் வீரர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பவன் முஞ்சால் கூறுகையில்," எரிக் புயெல் ரேஸிங் நிறுவனத்துடன் இணைந்து உலக சூப்பர் பைக் பந்தயத்தில் பங்கேற்பது மிகுந்த பெருமிதம் தருகிறது.
இதன்மூலம், ஹீரோவின் பிராண்டு சர்வதேச அளவில் எளிதாக பிரபலமடையும். மேலும், சர்வதேச அளவில் எங்களது வர்த்தக விரிவாக்கத் திட்டங்களுக்கு இது உதவிகரமாக இருக்கும்," என்றார்.
உலகின் முதல்நிலை சூப்பர்பைக் பந்தயமாக கருதப்படும் வேர்ல்டு சூப்பர்பைக் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் இந்தியாவின் முதல் பைக் தயாரிப்பு நிறுவனம் ஹீரோ என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








