ரூ.3 லட்சத்தில் இந்தியாவில் அறிமுகமாகும் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
ஜப்பானை சேர்ந்த டெரா மோட்டார்ஸ் நிறுவனம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பழைய முகத்தை மாற்றுவதற்கு சபதம் எடுத்து களமிறங்கியுள்ளது. இதற்காக, ஏ4000ஐ என்ற புதிய ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்கூட்டரின் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் இருக்கும் இடத்தில் ஐபோன் பொருத்தப்பட்டு இருக்கிறது.
ஜப்பானில் 4,50,000 யென் விலையில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த ஸ்கூட்டர் இந்தியாவிலும் விற்பனைக்கு வர உள்ளதாக டெரா இணையதள தகவல் கூறுகிறது. கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

ஐபோன் 3ஜிஎஸ்
தற்போது அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் டெரா ஏ4000ஐ ஸ்கூட்டரில் ஐபோன் 3ஜிஎஸ் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரில் பொருத்தப்பட்டு இருக்கிறது. இதன்மூலம், பேட்டரி சார்ஜ் விபரம், வேகம், எவ்வளவு தூரம் செல்லலாம் போன்ற தகவல்களை பெற முடியும். மேலும், ஸ்கூட்டரின் மைலேஜ், பேட்டரி பெர்ஃபார்மென்ஸ் உள்ளிட்ட பல தகவல்களை ஐபோன் மூலம் பெற முடியும்.

பேட்டரி
லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த பேட்டரி 50,000 கிமீ வரை ஆயுட்காலம் கொண்டது.

எவ்வளவு தூரம் செல்லும்?
ஒரு முறை முழு சார்ஜ் ஆவதற்கு 4.5 மணிநேரம் எடுத்துக் கொள்ளும். ஒரு முறை சார்ஜ் செய்தால் 65 கிமீ செல்லும்.

உயர்தர ஸ்கூட்டர்
மலிவு விலை ஸ்கூட்டர்கள் போல் அல்லாமல், நம்பகத்தன்மை, பெர்ஃபார்மென்ஸ் உள்ளிட்ட அனைத்து விதத்திலும் இந்த ஸ்கூட்டர் சிறப்பாக இருக்கும் என டெரா உறுதிகொடுக்கிறது. 2015ம் ஆண்டுக்குள் ஆசிய மார்க்கெட்டுகளில் ஒரு லட்சம் ஸ்கூட்டர்களை விற்பனை செய்ய டெரா திட்டமிட்டுலள்ளது.

அப்படியா?
இந்த ஸ்கூட்டர் ரூ.3 லட்சத்தை நெருங்கும் விலையில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இது நம் நாட்டு வாடிக்கையாளர்களை கவருமா என்பது சந்தேகமே!


Click it and Unblock the Notifications








