இந்தியாவில் கிடைக்கும் டாப்- 10 அதிவேக சூப்பர் பைக்குகள்!!

By Saravana

டிசைன், தொழில்நுட்பம், சக்தி என அனைத்திலும் மோட்டார்சைக்கிள்களின் உச்சபட்ச வலிமைக்கு எடுத்துக்காட்டாக சூப்பர் பைக்குகள் திகழ்கின்றன. கைக்கு எட்டா கனியாக இருந்து வந்த சூப்பர் பைக்குகள் தற்போது சாலை கட்டமைப்பு வசதிகள் மேம்பட்டு வருவதும், மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்திருப்பதன் காரணமாக மார்க்கெட் வலுவானதாகியுள்ளது.

கனவாக இருந்த பைக்குகளை தற்போது எளிதாக வாங்குவதற்கும், சர்வீஸ் செய்வதற்கும் அங்கீகரிக்கப்பட்ட சேவை மையங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதும் இளைய சமுதாய வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளன. இந்த நிலையில், இந்தியாவில் தற்போது விற்பனைக்கு கிடைக்கும் அதிசக்திவாய்ந்த டாப்-10 சூப்பர் பைக் மாடல்களை பார்வைக்கு வழங்கிறோம்.

சுஸுகி ஹயபுசா

சுஸுகி ஹயபுசா

டாப் ஸ்பீடு: மணிக்கு 300 கிமீ வேகம்

உலக அளவில் அதி பிரசித்தி பெற்ற இந்த சூப்பர் பைக்கில் 1340சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 197 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட இந்த பைக் லிட்டருக்கு 10 கிமீ மைலேஜ் தரும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. 260 கிலோ எடை கொண்ட இந்த பைக் ரூ.13.75 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது.

 கவாஸாகி நின்ஜா இசட்எக்ஸ் 14ஆர்

கவாஸாகி நின்ஜா இசட்எக்ஸ் 14ஆர்

டாப் ஸ்பீடு: மணிக்கு 300 கிமீ வேகம்

சமீபத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட இந்த பைக்கில் 1,441சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 197 பிஎச்பி ஆற்றலையும், 162 என்எம் டார்க்கையும் அளிக்கும். 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டது. இந்த பைக்கின் மைலேஜ் லிட்டருக்கு 10 கிமீ. 265 கிலோ எடையுடன் அசுர பலம் வாய்ந்த பைக்கின் தோற்றமும் அவ்வாறே. ரூ.16.90 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது.

 பிஎம்டபிள்யூ எஸ்1000ஆர்ஆர்

பிஎம்டபிள்யூ எஸ்1000ஆர்ஆர்

டாப் ஸ்பீடு: மணிக்கு 305 கிமீ வேகம்

இந்த சூப்பர் பைக்கில் 193 பிஎச்பி பவரையும், 112 என்எம் டார்க்கையும் அளிக்கும் 999 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் கொண்ட இந்த பைக் லிட்டருக்கு 10 கிமீ மைலேஜ் தரும் என தெரிவிக்கப்படுகிறது. 178 கிலோ எடை கொண்ட இந்த பைக் ரூ.18.02 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

அப்ரிலியா ஆர்எஸ் வி4 ஆர்

அப்ரிலியா ஆர்எஸ் வி4 ஆர்

டாப் ஸ்பீடு: மணிக்கு 297 கிமீ வேகம்

இந்த சூப்பர் பைக்கில் 184 பிஎச்பி ஆற்றலையும், 117 என்எம் டார்க்கையும் அளிக்கும் 999சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட இந்த பைக்கின் மைலேஜும் லிட்டருக்கு 10 கிமீ. 186 கிலோ எடை கொண்ட இந்த பைக் ரூ.21.90 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

 ஹோண்டா சிபிஆர் 1000ஆர்ஆர்

ஹோண்டா சிபிஆர் 1000ஆர்ஆர்

டாப் ஸ்பீடு: மணிக்கு 297 கிமீ வேகம்

வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்ற ஹோண்டா சிபிஆர் வரிசையிலான இந்த சூப்பர் பைக்கில் 177 பிஎச்பி ஆற்றலையும், 112 என்எம் டார்க்கையும் அளிக்கும் 999சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. ஃபயர்பிளேடு என்றும் அழைக்கப்படும் இந்த பைக்கில் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டது. இந்த பைக்கின் மைலேஜ் வியக்க வைக்கிறது. அதுதான் ஹோண்டாவின் தொழில்நுட்பம். பவர் மற்றும் மைலேஜ் இரண்டையும் சாத்தியப்படுத்தும் இந்த சூப்பர் பைக் லிட்டருக்கு 20 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது. 199 கிலோ எடை கொண்ட இந்த பைக் ரூ.15.46 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

கவாஸாகி இசட்10ஆர்

கவாஸாகி இசட்10ஆர்

டாப் ஸ்பீடு: 295 கிமீ வேகம்

சமீபத்தில் கவாஸாகி அறிமுகம் செய்த இரண்டு சூப்பர் பைக்குளில் ஒன்று இது. இந்த பைக்கில் 197 பிஎச்பி ஆற்றலையும், 112 என்எம் டார்க்கையும் அளிக்கும் 998சிசி எஞ்சின் உள்ளது. 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் கொண்ட இந்த பைக் லிட்டருக்கு 10 கிமீ மைலேஜ் தரும் என தெரிவிக்கப்படுகிறது. 198 கிலோ எடை கொண்ட இந்த பைக் ரூ.15.70 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

சுஸுகி ஜிஎஸ்எக்ஸ் ஆர்1000

சுஸுகி ஜிஎஸ்எக்ஸ் ஆர்1000

டாப் ஸ்பீடு: மணிக்கு 288 கிமீ வேகம்

ஹயபுசா புகழ் சுஸுகியின் 191 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்ட 999சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்ட இந்த பைக் லிட்டருக்கு 15 கிமீ மைலேஜ் தரும் என தெரிவிக்கப்படுகிறது. 205 கிலோ எடை கொண்ட இந்த சுஸுகி சூப்பர் பைக் ரூ.13 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது.

 யமஹா ஒய்இசட்எஃப் ஆர்1

யமஹா ஒய்இசட்எஃப் ஆர்1

டாப் ஸ்பீடு: மணிக்கு 285 கிமீ வேகம்

180 பிஎச்பி ஆற்றலையும், 115.5 என்எம் டார்க்கையும் அளிக்கும் 998சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட இந்த பைக் லிட்டருக்கு 15 கிமீ மைலேஜ் தரும் என தெரிவிக்கப்படுகிறது. 206 கிலோ எடை கொண்ட இந்த பைக் ரூ.12.50 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

அப்ரிலியோ டுவோனோ வி4ஆர்

அப்ரிலியோ டுவோனோ வி4ஆர்

டாப் ஸ்பீடு: மணிக்கு 270 கிமீ வேகம்

பியாஜியோவின் அங்கமான அப்ரிலியா பிராண்டில் விற்பனை செய்யப்படும் இந்த சூப்பர் பைக்கில்167 பிஎச்பி ஆற்றலையும், 111.5 என்எம் டார்க்கையும் அளிக்கும் 999சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட இந்த பைக் லிட்டருக்கு 10 கிமீ மைலேஜ் தரும் என தெரிவிக்கப்படுகிறது. 183 கிலோ எடை கொண்ட இந்த பைக் ரூ.19.32 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

 டுகாட்டி டயாவெல்

டுகாட்டி டயாவெல்

டாப் ஸ்பீடு: மணிக்கு 260 கிமீ வேகம்

உலக அளவில் பல நட்சத்திரங்களின் முதல் சாய்ஸ். செம ஸ்டைலான இந்த இந்த சூப்பர் பைக்கில் 162 பிஎச்பி ஆற்றலையும், 127.5 என்எம் டார்க்கையும் அளிக்கும் 1198சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட இந்த பைக் லிட்டருக்கு 10 கிமீ மைலேஜ் தரும் என தெரிவிக்கப்படுகிறது. 205 கிலோ எடை கொண்ட இந்த பைக் ரூ.25.10 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது.

More from DriveSpark

Article Published On: Monday, December 23, 2013, 13:45 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+