புத்தம் புதிய 250சிசி பைக்: விரைவில் அறிமுகம் என டிரையம்ஃப் அறிவிப்பு

By Saravana

மேட் இன் இந்தியா பைக்காக கருதப்படும் புதிய 250சிசி பைக்கை டிரையம்ஃப் உறுதிப்படுத்தியுள்ளது. இத்தாலியின் மிலன் நகரில் நடந்து வரும் மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் விரைவில் புதிய டேடோனா 250சிசி பைக்கை அறிமுகம் செய்ய இருப்பதாக டிரையம்ஃப் அறிவித்துள்ளது.

இந்தியாவில் இந்த மாத இறுதியில் பைக்குகளை விற்பனைக்கு கொண்டு வர இருக்கும் டிரையம்ஃப் நிறுவனத்திடமிருந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஹார்லி டேவிட்சன் குறிவைத்து காய் நகர்த்தி வரும் 250சிசி மார்க்கெட்டில் டிரையம்ஃப் நிறுவனமும் புதிய பைக்கை நிலைநிறுத்த இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 மேட் இன் இந்தியா

மேட் இன் இந்தியா

இந்த பைக் இந்தியாவில் புதிதாக அமைக்கப்பட்டும் வரும் ஆலையில் உற்பத்தி செய்ய டிரையம்ஃப் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரு மாடல்கள்

இரு மாடல்கள்

புதிய டேடோனா 250 பைக் தவிர 250சிசி நேக்டு வெர்ஷன் மாடலையும் டிரையம்ஃப் களமிறக்க உள்ளது. ஆனால், இதுபற்றி, அந்த நிறுவனம் வாய் திறக்கவில்லை. இரு பைக்குகளிலும் ஒரே எஞ்சின் பயன்படுத்தப்பட உள்ளது.

 குறைவான விலை

குறைவான விலை

ஒரே இருக்கை அமைப்பு, சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் போன்றவற்றுடன் புதிய பைக்கை களமிறக்க டிரையம்ஃப் திட்டமிட்டுள்ளது. எனவே, போட்டியாளர்களுக்கு சவால் கொடுக்கும் விலையில் வரும் என தெரிகிறது.

அறிமுகம்

அறிமுகம்

பிப்ரவரியில் நடைபெற இருக்கும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இந்த புதிய பைக்கை டிரையம்ஃப் அறிமுகம் செய்யும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மாதம் விற்பனை

இந்த மாதம் விற்பனை

இந்த மாதம் 28ந் தேதி தனது பைக் மாடல்களை முறைப்படி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருகிறது டிரையம்ஃப்.

Images: Chris Doene Automotive LLC

மாதிரி படம்

மாதிரி படம்

டிரையம்ஃப் வெளியிட்டிருக்கும் புதிய 250சிசி பைக்கின் மாதிரி படம்.

More from DriveSpark

Article Published On: Friday, November 8, 2013, 17:25 [IST]
English summary
In a development related to the British motorcycle manufacturer starting business in India, Triumph announced during its presentation at EICMA a new small displacement sports bike, a Daytona 250, that will be launching in the near future.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+