இந்தியாவில் பைக்குகளை வரிசை கட்டப் போகும் டிரையம்ஃப்
கடந்த ஆண்டு நடந்த டெல்லி ஆட்டோ கண்காட்சியில் தனது பெரும்பாலான தயாரிப்புகளை டெல்லி சர்வதேச ஆட்டோ கண்காட்சியில் இங்கிலாந்தை சேர்ந்த டிரையம்ஃப் நிறுவனம் பார்வைக்கு வைத்திருந்தது. மேலும், பெங்களூர் அருகே உள்ள நரசப்பூர் தொழிற்பேட்டையில் மோட்டார்சைக்கிள் அசெம்பிளிங் ஆலையை அமைக்கப் போவதாகவும் அறிவித்தது.
ஆனால், இதுவரை இதற்கான எந்த நடவடிக்கையையும் எடுக்காமல் இருந்து வந்தது. இந்த நிலையில், விரைவில் தனது மோட்டார்சைக்கிள்களை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக டிரையம்ஃப் தெரிவித்துள்ளது. மேலும், இப்போதைக்கு இந்தியாவில் ஆலை அமைக்கும் திட்டத்தையும் ஒத்தி வைத்துள்ளதாக கூறியிருக்கிறது.
வரும் அக்டோபர் மாதம் முதல் இந்தியாவில் கால் பதிக்கும் அந்த நிறுவனம் தனது போனிவிலி, டேடோனா, ராக்கெட்3, ஸ்பீட் டிரிப்பிள், ஸ்டீரிட் டிரிப்பிள் உள்ளிட்ட பைக்குகளை வரிசை கட்ட உள்ளது. ஸ்லைடரில் டிரையம்ஃப் நிறுவனம் அறிமுகப்படுத்த இருக்கும் பைக் மாடல்களை காணலாம்.

போனிவில்லி

போனிவில்லி

போனிவில்லி

போனிவில்லி

ஸ்ட்ரீட் டிரிப்பிள்

ராக்கெட் 3

டேடோனா

ஸ்பீடு டிரிப்பிள்

ஸ்பீடு டிரிப்பிள்



Click it and Unblock the Notifications








