பெங்களூரில் முதல் பைக் ஷோரூமை திறக்கும் டிரையம்ஃப்!!
இந்தியாவில் முதல் பைக் ஷோரூமை பெங்களூரில் திறக்க இருக்கிறது டிரையம்ஃப் மோட்டார்சைக்கிள் நிறுவனம்.
வரும் 28ந் தேதி இந்தியாவில் முறைப்படி பைக்குகளை விற்பனைக்கு கொண்டு வருகிறது டிரையம்ஃப். ஹரியானா மாநிலம், மானேசரில் உள்ள ஆலையில் பைக்குகளை அசெம்பிள் செய்ய அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு நெருக்கமான தொடர்பு இருக்கும் வகையில், நாட்டின் முக்கிய நகரங்களில் ஷோரூம்களை விரைவில் திறக்க உள்ளது.
முதலாவது ஷோரூம் பெங்களூரில் திறக்கப்பட உள்ளது. டெல்லி, மும்பை, சென்னை ஆகிய நகரங்களிலும் அடுத்தடுத்து பைக் ஷோரூம்களை டிரையம்ஃப் திறக்க உள்ளது.
ரூ.5.5 லட்சம் விலை கொண்ட போனிவில்லி முதல் ஸ்ட்ரீட் ட்ரிப்பிள், டேடோனா 675, ஸ்பீடு ட்ரிப்பிள், டைகர் 800எக்ஸ்சி, ஸ்ட்ரோம் மற்றும் ராக்கெட்-3 வரையிலான உயர் ரக பிரிமியம் பைக்குகளை அந்த நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வருகிறது.
இதுதவிர, இந்தியா உள்ளிட்ட வளரும் மார்க்கெட்டுகளுக்கு ஏற்ற அம்சங்களுடன் புதிய 250சிசி பைக்கையும் அறிமுகம் செய்ய உள்ளது டிரையம்ஃப்.


Click it and Unblock the Notifications








