ஆக்டிவாவுக்கு போட்டியாக வரும் 'பெரிய' டிவிஎஸ் ஸ்கூட்டர்!
ஆக்டிவாவுக்கு போட்டியாக புதிய ஸ்கூட்டரை டிவிஎஸ் விரைவில் அறிமுகப்படுத்த இருக்கிறது.
ஸ்கூட்டி மூலம் ஸ்கூட்டர் மார்க்கெட்டில் தனி இடத்தை பெற்ற டிவிஎஸ் நிறுவனம் ஜப்பானிய ஸ்கூட்டர்களால் பின் தள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில், புதிய ஸ்கூட்டர்கள் மூலம் ஜப்பானிய ஸ்கூட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் முயற்சிகளை டிவிஎஸ் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
அந்த வகையில், புத்தம் புதிய ஸ்கூட்டர் மாடலை டிவிஎஸ் விரைவில் அறிமுகப்படுத்துகிறது. வீகோ ஸ்கூட்டரைவிட பெரியதாகவும், 125சிசி திறன் கொண்ட எஞ்சினுடன் புதிய ஸ்கூட்டர் வர இருக்கிறது.
இதுதவிர, மற்றுமொரு புதிய ஸ்கூட்டரையும் டிவிஎஸ் உருவாக்கி வருகிறது. அடுத்த ஆண்டு இந்த ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய டிவிஎஸ் திட்டமிட்டுள்ளது.
புதிய ஸ்கூட்டர்கள் மாடல்கள் தவிர, மேம்படுத்தப்பட்ட ஸ்டார் சிட்டி, விக்டர் மற்றும் ஸ்கூட்டி மாடல்களையும் விற்பனைக்கு விட உள்ளது.
அடுத்த ஆண்டு இறுதிக்குள் மொத்தத்தில் டிவிஎஸ் நிறுவனத்தின் 5 புதிய இருசக்கர வாகன மாடல்கள் மார்க்கெட்டிற்கு வந்துவிடும்.


Click it and Unblock the Notifications








