ஜனவரியில் அறிமுகமாகிறது டிவிஎஸ்-ன் புதிய ஸ்கூட்டர்!!
ஜூபிடரை தொடர்ந்து ஜனவரியில் புதிய ஸ்கூட்டர் மாடலை டிவிஎஸ் மோட்டார்ஸ் அறிமுகப்படுத்த உள்ளது.
டிவிஎஸ் ஸ்கூட்டரின் பெப் வரிசை ஸ்கூட்டர்களுக்கு தென் இந்திய மார்க்கெட்டில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இலகு எடையுடன் எளிதான கையாளுமை கொண்ட பெப் வரிசை ஸ்கூட்டர்களை வாங்குவதற்கு பெண்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

இதனை தக்கவைத்துக் கொள்ளும் விதமாக அவ்வப்போது பெப் ஸ்கூட்டரை மேம்படுத்தி அறிமுகம் செய்து வருகிறது டிவிஎஸ் மோட்டார்ஸ். இந்த நிலையில், பெப் ஸ்கூட்டரின் புதிய மாடல் ஜனவரில் அறிமுகமாக உள்ளது.
டிவிஎஸ் ஸெஸ்ட் என்ற பெயரில் வரும் இந்த புதிய ஸ்கூட்டரில் கூடுதல் அம்சங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது. ஆனால், முழு விபரங்களை டிவிஎஸ் இதுவரை வெளியிடவில்லை.


Click it and Unblock the Notifications








