விரைவில் அறிமுகமாகும் புதிய பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள்!!

By Saravana

இந்தியாவின் இருசக்கர வாகன மார்க்கெட் மிக பக்குவப்பட்ட நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதனையடுத்து, ஏராளமான புதிய மாடல்கள் அடுத்தடுத்து பல்வேறு ரகங்களிலும் அறிமுகமாக உள்ளன.

இந்திய மார்க்கெட்டில் வெற்றி பெறுவதற்கு விலை நிர்ணயம் முக்கிய பங்கு வகிக்கிறது. கடும் போட்டி நிலவி வரும் இந்த சூழலில் இந்திய மார்க்கெட்டில் விரைவில் அறிமுகமாக இருக்கும் புதிய இருசக்கர வாகன மாடல்கள் பற்றிய விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

டிவிஎஸ் ஸெஸ்ட்

டிவிஎஸ் ஸெஸ்ட்

எதிர்பார்க்கும் விலை: ரூ.40,000 முதல் ரூ.45,000 வரை

டிவிஎஸ் பெப் வரிசையில் வர இருக்கும் புதிய மாடல்தான் ஸெஸ்ட். வரும் ஜனவரியில் இந்த புதிய ஸ்கூட்டர் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று தெரிகிறது.

பஜாஜ் பல்சர் 375

பஜாஜ் பல்சர் 375

எதிர்பார்க்கும் விலை: ரூ.2 லட்சம்

கேடிஎம் டியூக் 390பைக்கின் டியூனிங் செய்யப்பட்ட 375சிசி எஞ்சினுடன் வரும் புதிய பல்சர் மாடல் இது. பஜாஜ் ஆட்டோவின் முதல் ஃபேரிங் பேனல்களுடன் வரும் பைக் மாடல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஹீரோ கரீஷ்மா ஸிஎம்ஆர்

ஹீரோ கரீஷ்மா ஸிஎம்ஆர்

எதிர்பார்க்கும் விலை: ரூ.1.5 லட்சம்

கரீஷ்மா ஸிஎம்ஆர் பைக்குக்கு மாற்றாக புதிய மாடலை ஹீரோ களமிறக்க உள்ளது. அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் விற்பனைக்கு வருகிறது. ஹீரோவின் பார்ட்னரான அமெரிக்காவின் எரிக் புயெல் நிறுவனத்தின் தொழில்நுட்ப அம்சங்கள் இடம்பெற்றிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மஹிந்திரா மோஜோ

மஹிந்திரா மோஜோ

எதிர்பார்க்கும் விலை: ரூ.2 லட்சம்

2010ல் மஹிந்திராவின் 300சிசி ஸ்போர்ட்ஸ் பைக் மாடலான மோஜோ கான்செப்ட் நிலையில் காட்டப்பட்டது. ஆனால், இதன் அறிமுகத்தை மஹிந்திரா தள்ளிப் போட்டுக் கொண்டே போகிறது. டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இந்த புதிய பைக் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

 ராயல் என்பீல்டு ஜிடி

ராயல் என்பீல்டு ஜிடி

எதிர்பார்க்கும் விலை: ரூ.2.5 லட்சம்

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் கஃபே ரேஸர் மாடலான கான்டினென்டல் ஜிடி இங்கிலாந்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுவிட்டது. அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.

ஹயோசங் ஜிவி250

ஹயோசங் ஜிவி250

எதிர்பார்க்கும் விலை: ரூ.2.5 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை

250சிசி மார்க்கெட்டில் ஸ்போர்ட்ஸ் பைக் மாடல்கள் நிரம்பி வழிகின்றன. ஆனால், குரூஸர் பைக் மாடல்கள் இல்லை. இந்த குறையை போக்கும் விதத்தில் ஹயோசங் டிஎஸ்கே கூட்டணி ஜிவி250 குரூஸர் பைக்கை அறிமுகம் செய்ய உள்ளன. இந்த பைக் இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்படும்.

 ஹார்லி டேவிட்சன் 500சிசி

ஹார்லி டேவிட்சன் 500சிசி

எதிர்பார்க்கும் விலை: ரூ.4.5 லட்சம்

இந்தியா போன்ற மார்க்கெட்டுக்காக உருவாக்கப்பட்டு வரும் புதிய ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிள். இந்தியாவிலேயே பாகங்கள் பெற்று அசெம்பிள் செய்யப்பட உள்ளதால் மிக சவாலான விலையில் வரும் என்று தெரிகிறது.

சுஸுகி இனசுமா ஜிடபிள்யூ 250எஸ்

சுஸுகி இனசுமா ஜிடபிள்யூ 250எஸ்

எதிர்பார்க்கும் விலை: ரூ.2 லட்சம்

கடந்த ஜூன் மாதமே இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த பைக்கை அடுத்த ஆண்டு பிப்ரவரியில் களமிறக்க சுஸுகி முடிவு செய்துள்ளது.

டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ்

டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ்

ரூ.6 லட்சம் முதல்

இங்கிலாந்தை சேர்ந்த டிரையம்ப் மோட்டார்சைக்கிள் நிறுவனம் விரைவில் தனது பிரிமியம் பைக்குகளை இந்தியாவில் வரிசைக்கட்ட உள்ளது. ரூ.6 லட்சம் விலையில் ஆரம்பமாகும் போனிவிலி முதல் ரூ.30 லட்சம் வரையிலான ராக்கெட்3 பைக் மாடல்கள் இந்தியாவில் கொண்டு வரப்பட உள்ளது.

விக்டரி மோட்டார்சைக்கிள்

விக்டரி மோட்டார்சைக்கிள்

எதிர்பார்க்கும் விலை: ரூ.30 லட்சம்

போலரிஸ் நிறுவனத்தின் அங்கமான விக்டரி நிறுவனம் தனது விக்டரி கிராஸ் கன்ட்ரி டூர் மற்றும் டூர் வெர்ஷன் ஆகிய இரண்டு டூரர் பைக் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்கிறது. அடுத்த ஆண்டு மத்தியில் இந்த புதிய பைக்குகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, September 30, 2013, 11:28 [IST]
English summary
The near future holds some exciting news for motorcycle enthusiasts in India. The rapidly maturing two wheeler scene in India will witness the launch of several bike and scooter models in all categories, ranging from small displacement scooterettes to large displacement super bikes to cruisers to quarter liter motorcycles.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+