புதிய வெஸ்பா விஎக்ஸ்125 விற்பனைக்கு வந்தது - விபரம்
கடந்த மாதம் கூடுதல் அம்சங்கள் கொண்ட புதிய வெஸ்பா ஸ்கூட்டரை பியாஜியோ அறிமுகம் செய்தது. வெஸ்பா விஎக்ஸ் 125 என்ற பெயரிடப்பட்ட இந்த ஸ்கூட்டரின் விலையை தவிர மற்ற அனைத்து விபரங்களும் அப்போது வெளியிடப்பட்டன.
இந்த நிலையில், புதிய வெஸ்பா விஎக்ஸ்125 ஸ்கூட்டரின் விலையை இன்று அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட வெஸ்பா எல்எக்ஸ்125 ஸ்கூட்டரை விட ரூ.10,000 கூடுதலான விலையில் இந்த புதிய ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்துள்ளது. புதிய வெஸ்பா விஎக்ஸ்125 ஸ்கூட்டரின் கூடுதல் சிறப்பம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.

டிஸ்க் பிரேக்
இந்த புதிய ஸ்கூட்டரின் முன்சக்கரத்தில் 200 மிமீ டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது.

புதிய வண்ணம்
இந்த புதிய ஸ்கூட்டர் படத்தில் உள்ள மெட்டாலிக் கிரீன் வண்ணத்திலும், அடுத்த ஸ்லைடரில் உள்ள இரட்டை வண்ணக் கலவையிலும் கிடைக்கும்.

இரட்டை வண்ணம்
இளஞ்சிவப்பு மற்றும் சிவப்பு நிற கலவை கொண்டதாக இரண்டாவது வண்ணத்திலும் தேர்வு செய்து கொள்ளலாம்.

கிராப் ரெயில்
குரோம் பூச்சுடன் கூடிய கிராப் ரெயில் ஹேண்டில்பார் பின்னால் அமர்ந்திருப்பவர் பாதுகாப்பாக பிடித்துக் கொண்டு செல்ல உதவும்.

ஸாப்பர் டயர்
இந்த புதிய ஸ்கூட்டரில் எம்ஆர்எஃப் ஸாப்பர் டயர்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

ஸ்பீடோமீட்டர் டயல்
புதிய ஸ்பீடோமீட்டர் டயல் பொருத்தப்பட்டு இருக்கிறது.

பீஜ் வண்ண சீட்
பீஜ் வண்ணம் கொண்ட இருக்கை ஆப்ஷனலாக பெற்றுக் கொள்ளலாம். ரோஸோ டிராகன் மற்றும் நீல வண்ண கலர்களில் மட்டும் இந்த பீஜ் வண்ண இருக்கை கிடைக்கும்.

எஞ்சின்
வெஸ்பா எல்எக்ஸ்125 ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டிருக்கும் அதே எஞ்சின்தான் இதிலும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்கூட்டரில் 10 பிஎஸ் பவரையும், 11 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் 125சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.

பெட்ரோல் டேங்க்
இந்த ஸ்கூட்டரில் 8 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் இருக்கிறது.

மைலேஜ்
இந்த ஸ்கூட்டர் லிட்டருக்கு 60கிமீ மைலேஜ் தரும் என பியாஜியோ தெரிவித்துள்ளது.

விலை
ரூ.71,380 மும்பை எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








