உலகின் அதிவேக எலக்ட்ரிக் க்ரூஸர் பைக் பற்றிய தகவல்கள்
உலகின் அதிவேக எலக்ட்ரிக் பைக் மாடலை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த வோக்ஸன் அறிமுகம் செய்துள்ளது. நடுவில் லித்தியம் அயான், மின் மோட்டார் அடங்கிய பெட்டியை சுற்றியே இந்த பைக்கை கட்டியுள்ளனர்.
தோற்றத்தில் வித்தியாசமான இந்த ஒற்றை இருக்கை கொண்ட அதிசக்திவாய்ந்த எலக்ட்ரிக் பைக்கிற்கு வாட்மேன் என்று பெயரிடப்பட்டுள்ளது. முன்மாதிரி தொழில்நுட்பத்திலும், வடிவமைப்பிலும் வந்திருக்கும் இந்த புதிய எலக்ட்ரிக் பைக் குறித்த கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

வோக்ஸன் பிராண்டு
கடந்த 1995ம் ஆண்டு துவங்கப்பட்ட வோக்ஸன் நிறுவனம் எலக்ட்ரிக் பைக் தயாரிப்பில் பிரான்ஸ் நாட்டின் முன்னோடி நிறுவனமாக இருந்தது. நிதி நெருக்கடியால் மூடப்பட்ட இந்த நிறுவனம் தற்போது வென்ச்சுரி ஆட்டோமொபைல்ஸ் நிறுவனத்தின் கீழ் செயல்படுகிறது. தற்போது இந்த புதிய வாட்மேன் பைக்கை கடந்த வாரம் பாரிஸ் நகரில் நடந்த ஆட்டோமொபைல் கண்காட்சியில் பார்வைக்கு வைத்திருந்தது.

மின் மோட்டார்
இந்த பைக்கில் 200 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் அதிகசக்திவாய்ந்த மின் மோட்டார் பொருத்தப்பட்டிருக்கிறது. பெல்ட் மூலம் ஆற்றல் சக்கரங்களுக்கு கடத்தப்படுகிறது.

பெர்ஃபார்மென்ஸ்
0 -100 கிமீ வேகத்தை வெறும் 3.4 வினாடிகளில் தொட்டு பார்க்கும் வல்லமை பொருந்திய இந்த மோட்டார்சைக்கிள் 350 கிலோ எடை கொண்டது.

டாப் ஸ்பீடு
மணிக்கு 170 கிமீ வேகத்தில் சீறிச் செல்லும் ஆற்றல் கொண்டது.

ரேஞ்ச்
ஒரு முறை சார்ஜ் செய்யும்போது 180 கிமீ தூரம் வரை செல்ல முடியும்.

குயிக் சார்ஜ்
இந்த மோட்டார்சைக்கிளின் லித்தியம் அயான் பேட்டரி 30 நிமிடங்களில் 80 சதவீதம் சார்ஜ் ஆகிவிடும் என்பது இதன் தொழில்நுட்ப சிறப்புக்கு எடுத்துக்காட்டாக கூறலாம்.

தயாரிப்பு
அடுத்த 18 முதல் 24 மாதங்கள் வரை இந்த பைக் விற்பனைக்கு கிடைக்காது. அதன்பின்னர் ஆர்டரின் அடிப்படையில் தயாரித்து கொடுக்கப்பட உள்ளது. இந்த பைக் முழுக்க முழுக்க எந்திரங்கள் உதவியின்றி கைகளால் ஒருங்கிணைக்கப்படுகிறது. விலை விபரம் வெளியிடப்படவில்லை.


Click it and Unblock the Notifications








