2012 விற்பனை: பரம திருப்தியில் யமஹா

கடந்த ஆண்டு யமஹாவின் விற்பனை 6 விழுக்காடு அதிகரித்துள்ளது. 2011ல் 4,60,815 இருசக்கர வாகனங்களை விற்பனை செய்த யமஹா நிறுவனம் கடந்த ஆண்டு 4,87,290 இருசக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது.
உள்நாட்டு விற்பனை 1.4 விழுக்காடும், ஏற்றுமதி 21 விழுக்காடும் அதிகரித்துள்ளது. இதுகுறித்து யமஹா நிறுவனத்தின் சிஇஓ ஹிரோயுகி சுஸுகி கூறுகையில்,
" கடந்த ஆண்டு எங்களுக்கு மிக சாதகமான வருடமாக இருந்தது. ரே ஸ்கூட்டரை அறிமுகம் செய்தோம். எதிர்பார்த்தது போன்றே ரே ஸ்கூட்டருக்கு நகர்ப்புறங்களில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு ரே ஸ்கூட்டரும், எப்இசட் பைக்கும் முக்கிய பங்களிப்பை வழங்கின. விற்பனையை அதிகரிக்க ஊரகப் பகுதிகளில் எங்களது டீலர் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்," என்றார்.


Click it and Unblock the Notifications








