ஆக்டிவாவுக்கு போட்டியாக புதிய ஸ்கூட்டரை களமிறக்கும் யமஹா!!

By Saravana

இளைய வாடிக்கையாளர்களை குறிவைத்து களமிறக்கப்பட்ட யமஹா ரே ஸ்கூட்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதைத்தொடர்ந்து, குடும்பத்தினர் அனைவருக்கும் ஏற்ற வகையில் ஆக்டிவாவுக்கு எதிரான புதிய ஸ்கூட்டர் மாடலை யமஹா களமிறக்க உள்ளது.

யமஹா இந்தியாவின் புதிய நிர்வாக இயக்குனராக பொறுப்பேற்றுள்ள அசனோ மசாகி இந்த தகவலை தெரிவித்தார். அவர் கூறுகையில்," பிரிமியம் மோட்டார்சைக்கிள் மாடல்கள் மூலம் இந்திய இளைஞர்கள் மத்தியில் நன்மதிப்பையும், வலுவான அடித்தளத்தையும் பெற்றுள்ளோம். இந்தியர்கள் 90 சதவீதத்தினர் தினசரி பயன்பாட்டுக்காக இருசக்கர வாகனங்களை பயன்படுத்துகின்றனர். இதனை கருத்தில்கொண்டு இருபாலருக்கும் ஏற்ற புதிய ஸ்கூட்டர் மாடலை அறிமுகம் செய்ய உள்ளோம்," என்றார்.

மார்க்கெட் பங்களிப்பு

மார்க்கெட் பங்களிப்பு

ரே ஸ்கூட்டர் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு ஓர் ஆண்டுக்குள் 5 சதவீத மார்க்கெட் பங்களிப்பை யமஹா பெற்றிருக்கிறது. இந்த வலுவான அடித்தளத்தை தக்க வைத்துக் கொள்ளும் விதமாக புதிய ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய உள்ளது.

குறிப்பு: ஸ்லைடரில் ரே ஸ்கூட்டர் படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

ஆக்டிவா போட்டியாளர்

ஆக்டிவா போட்டியாளர்

ஆக்டிவா ஸ்கூட்டருக்கு இருக்கும் மார்க்கெட்டில் சிறிது பங்கு போடும் விதமாக சிறப்பான வசதிகள் மற்றும் கவர்ச்சியான டிசைன் கொண்டதாக புதிய ஸ்கூட்டர் இருக்குமென யமஹா வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எஞ்சின்

எஞ்சின்

ரே ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டிருக்கும் 113சிசி எஞ்சின் அல்லது புதிய எஞ்சினுடன் வரும் வாய்ப்புள்ளது. ஆனால், இதுகுறித்து யமஹா இதுவரை வாய் திறக்கவில்லை.

அறிமுகம்

அறிமுகம்

வரும் பிப்ரவரியில் நடைபெற இருக்கும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் புதிய ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய ஸ்கூட்டர் மூலம் யமஹாவின் மார்க்கெட் பங்களிப்பு வெகுவாக உயர வாய்ப்பு இருப்பதாக ஆட்டோமொபைல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

யமஹாவின் திட்டம்

யமஹாவின் திட்டம்

ரே மற்றும் ரே இசட் ஸ்கூட்டர்கள் மூலம் யமஹாவின் விற்பனையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலக்கட்டத்தில் 2.32 லட்சம் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்து 42 சதவீத வளர்ச்சியை யமஹா பதிவு செய்துள்ளது. எனவே, இந்த வளர்ச்சியை தக்க வைத்துக் கொள்வதற்கு புதிய மாடல்களை அறிமுகம் செய்வது கட்டாயமாகியுள்ளது. அதிலும் குறிப்பாக புதிய ஸ்கூட்டர் மாடல் மிக முக்கியம் என கருதுகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 29, 2013, 10:12 [IST]
English summary
Japanese two-wheeler manufacturer Yamaha Motor India is planning to launch a new scooter next year.
மேலும்... #yamaha #two wheeler #யமஹா
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+