புதிய 250சிசி பைக் கான்செப்ட்டை அறிமுகப்படுத்திய யமஹா
டோக்கியோ மோட்டார் ஷோவில் ஆர்25 என்ற புதிய கான்செப்ட் பைக்கை யமஹா அறிமுகம் செய்துள்ளது. யமஹாவிடமிருந்து 250சிசி பைக்கை எதிர்பார்க்கும் இந்திய ரசிகர்களின் மனக் குறையை இந்த புதிய பைக் போக்கும்.
இன்னும் இந்த பைக் கான்செப்ட் நிலையில்தான் இருப்பது சற்று ஏமாற்றம் அளித்தாலும், அடுத்த ஆண்டு இந்த புதிய பைக் மார்க்கெட்டுக்கு வந்துவிடும் என்று நம்பலாம்.

யமஹா ஆர்25 கான்பெட் பைக் தோற்றத்தில் ஆர்1 மற்றும் ஆர்6 டிசைன் தாத்பரியங்களை கொண்டுள்ளது. இந்த பைக்கில் 250சிசி பேரலல் ட்வின் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும்.
ஃபேரிங் பேனல்கள் உள்ளிட்டவை ஆர்15 பைக்கை நினைவூட்டுகிறது. இந்த பைக் மிகவும் இலகு எடை கொண்டதாக, தோற்றத்தில் மிக கவர்ச்சியாகவும், அடக்கமாகவும் இருக்கும்.


Click it and Unblock the Notifications








