ஹேண்டில்பாரில் பிரச்னை: ரே ஸ்கூட்டர்களை திரும்ப பெறும் யமஹா

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்," ரே ஸ்கூட்டரின் சோதனைகளின்போது ஸ்டீயரிங் இயக்கத்தில் பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஸ்டீயரிங் இயக்கத்தில் இருக்கும் பிரச்னையால் விபத்து நிகழ்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.
எனவே, வாடிக்கையாளர் நலன் கருதி பிரச்னை இருப்பதாக கருதப்படும் 56,082 ரே ஸ்கூட்டர்களை திரும்ப பெற இருக்கிறோம். இதுதொடர்பாக, வாடிக்கையாளர்களுக்கு தகவல் அனுப்பப்படும். இந்த பிரச்னை இலவசமாக சரிசெய்து தரப்படும்," என்று தெரிவித்துள்ளது.
இந்த ரீகால் அறிவிப்பு ரே ஸ்கூட்டருக்கு மட்டுமே பொருந்தும். சமீபத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட ரே இசட் ஸ்கூட்டருக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகன தயாரிப்பு நிறுவனங்கள் சியாம் கூட்டமைப்பில் பதிவு செய்து கொண்டு இதுபோன்று ஏற்படும் தொழில்நுட்ப பிரச்னைகளை தாமாகவே சரிசெய்து தரும் வழக்கத்தை கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் துவங்கின. இதுவரை இந்த புதிய திட்டத்தின் மூலம் இந்தியாவில் 2 லட்சம் வாகனங்கள் திரும்ப அழைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications