ஸீரோ எஸ்... ஓர் முழுமையான எலக்ட்ரிக் பைக் பற்றிய சிறப்பு தகவல்கள்
அமெரிக்காவை சேர்ந்த ஸீரோ நிறுவனம் உலகின் சிறந்த எலக்ட்ரிக் பைக் தயாரிப்பாளராக திகழ்கிறது. இந்த ஆண்டுக்கான ஐரோப்பாவின் சிறந்த எலக்ட்ரிக் பைக்காகவும் ஸீரோ எஸ் எலக்ட்ரிக் பைக் தேர்வு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது இடத்தையும் ஸீரோ நிறுவனத்தின் ஸீரோ டிஎஸ் பெற்றுள்ளது.
இந்த விருதை தொடர்ந்து 3வது ஆண்டாக ஸீரோ நிறுவன தயாரிப்புகள் பெற்று வருகின்றன. ஸீரோ எஸ், ஸீரோ டிஎஸ் தவிரவும் எஃப்எக்ஸ், எக்ஸ்யூ, எம்எக்ஸ் ஆகிய எலக்ட்ரிக் பைக் மாடல்களை ஸீரோ விற்பனை செய்து வருகிறது. ஓர் சிறந்த, முழுமையான எலக்ட்ரிக் பைக்குகளாக புகழப்பெறும் ஸீரோ நிறுவனத்தின் தயாரிப்புகள் பற்றிய கூடுதல் விபரங்கள் மற்றும் பைக் மாடல்களின் படங்களை ஸ்லைடரில் காணலாம்.

2 வேரியண்ட்கள்
ஸீரோ எஸ் பைக் இரண்டுவிதமான பேட்டரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. பேஸ் வேரியண்ட் பைக்கில் ஒரு முறை சார்ஜ் செய்தால் 165 கிமீ., தூரமும், டாப் வேரியண்ட்டில் 220 கிமீ தூரமும் செல்ல முடியும்.

சார்ஜ்-க்கான நேரம்
ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே 95 சதவீதம் சார்ஜ் ஆகிவிடும் திறன் கொண்டது.

பேட்டரியின் ஆயுள்
ஸீரோ பைக்குகளில் பொருத்தப்பட்டிருக்கும் இசட் ஃபோர்ஸ் பேட்டரிகள் 5 லட்சம் கிமீ வரை ஆயுள் கொண்டது. அதாவது, பைக்கின் ஆயுள் முழுவதுவம் பேட்டரியின் ஆயுளும் நீடிக்கும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

பவர்ஃபுல் மோட்டார்
இந்த பைக்கில் பொருத்தப்பட்டிருக்கும் எலக்ட்ரிக் மோட்டார் 54 எச்பி சக்தியை வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

சிறந்த மோட்டார்
ஸீரோ எஸ் பைக்கில் பொருத்தப்பட்டிருக்கும் இசட் ஃபோர்ஸ் மோட்டார் உலகின் சிறந்த ஏர்கூல்டு, அதிக திறன் கொண்ட மோட்டார் என ஸீரோ தெரிவிக்கிறது. மேலும், இந்த பைக்கில் பிரேக் பிடிக்கும்போது விரயமாகும் ஆற்றலை சேமிக்கும் தொழில்நுட்பமும் உள்ளது.

கியர் கிடையாது
இந்த பைக்கில் கிளட்ச், கியர் போன்ற தொல்லைகள் கிடையாது. ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்டிருப்பதால் ஆக்சிலேட்டரை திருகினால் போதும். அதிகபட்சம் மணிக்கு 152 கிமீ வேகம் செல்லும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பெல்ட் டிரைவ் சிஸ்டம்
ஸீரோ எஸ் பைக்கில் எலக்ட்ரிக் மோட்டாரிலிருந்து பின் சக்கரம் கார்பன் ஃபைபர் பெல்ட் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இது மிக குறைந்த உராய்வு கொண்டதாக இருக்கும் என்பதால் ஆற்றல் விரயமாவது தடுக்கப்படுகிறது.

டிரைவிங் ஆப்ஷன்
இந்த பைக்கில் ஈக்கோ மற்றும் ஸ்போர்ட் என்ற இரண்டுவிதமான டிரைவிங் ஆப்ஷன்கள் இருக்கின்றன.

சிட்டிக்கு பெஸ்ட்
சாதாரண பைக்குகளைவிட நகர்ப்புறங்களுக்கு ஏற்ற பைக்காக ஸீரோவின் தயாரிப்புகள் திகழ்கின்றன. ஆற்றல் சேமிப்பு வசதி இருப்பதால் அடிக்கடி பிரேக் பிடித்தாலும் ஆற்றல் பேட்டரியில் சேமிக்கப்படும்.

விலை
பேஸ் வேரியண்ட் 13,995 டாலர் விலையிலும், டாப் வேரியண்ட் 15,995 டாலர் விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

ஸீரோ எஸ் எலக்ட்ரிக் பைக்
கேடிஎம் டியூக்கை நினைவூட்டுகிறதா?. அடுத்தடுத்த ஸ்லைடுகளில் ஸீரோ எஸ் எலக்ட்ரிக் பைக்கின் கூடுதல் படங்களை காணலாம்.

ஸீரோ எஸ் எலக்ட்ரிக் பைக்
ஸீரோ எஸ் எலக்ட்ரிக் பைக்கின் கூடுதல் படங்கள்.

ஸீரோ எஸ் எலக்ட்ரிக் பைக்
ஸீரோ எஸ் எலக்ட்ரிக் பைக்கின் கூடுதல் படங்கள்.

ஸீரோ எஸ் எலக்ட்ரிக் பைக்
ஸீரோ எஸ் எலக்ட்ரிக் பைக்கின் கூடுதல் படங்கள்.

ஸீரோ எஸ் எலக்ட்ரிக் பைக்
ஸீரோ எஸ் எலக்ட்ரிக் பைக்கின் கூடுதல் படங்கள்.

ஸீரோ எஸ் எலக்ட்ரிக் பைக்
ஸீரோ எஸ் எலக்ட்ரிக் பைக்கின் கூடுதல் படங்கள்.

ஸீரோ எஸ் எலக்ட்ரிக் பைக்
ஸீரோ எஸ் எலக்ட்ரிக் பைக்கின் கூடுதல் படங்கள்.

ஸீரோ எஸ் எலக்ட்ரிக் பைக்
ஸீரோ எஸ் எலக்ட்ரிக் பைக்கின் கூடுதல் படங்கள்.

ஸீரோ எஸ் எலக்ட்ரிக் பைக்
ஸீரோ எஸ் எலக்ட்ரிக் பைக்கின் கூடுதல் படங்கள்.

ஸீரோ எஸ் எலக்ட்ரிக் பைக்
ஸீரோ எஸ் எலக்ட்ரிக் பைக்கின் கூடுதல் படங்கள்.


Click it and Unblock the Notifications








