மேம்படுத்தப்பட்ட புதிய ஹீரோ கிளாமர் பைக் விற்பனைக்கு வந்தது

By Saravana

தோற்றத்தில் சிறிய மாற்றங்களுடன் கூடிய புதிய ஹீரோ கிளாமர் பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வரி இல்லாமல் ரூ.53,375 என்ற டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த புதிய பைக் விற்பனைக்கு கிடைக்கும்.

125சிசி செக்மென்ட்டில் போட்டி அதிகமாகி போன நிலையில், கிளாமர் பைக்கின் கிளாமரை ஹீரோ கூட்டியுள்ளது. 2014ம் ஆண்டு மாடலாக விற்பனைக்கு வந்திருக்கும் புதிய ஹீரோ கிளாமர் பைக்கின் சிறப்பம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.

செய்தியின் தொடர்ச்சியை ஸ்லைடரில் தொடர்ந்து படிக்கலாம்!

வண்ணங்கள்

வண்ணங்கள்

மொத்தம் 5 வண்ணங்களில் புதிய ஹீரோ கிளாமர் பைக் விற்பனைக்கு கிடைக்கும். ஸ்லைடுகளில் உள்ள படங்களில் 5 வண்ணங்களிலான கிளாமர் பைக்கின் படங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

மாற்றங்கள்

மாற்றங்கள்

ஹெட்லைட் மற்றும் டெயில் லைட்டுகளில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதுதவிர, புதிய பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கரும் கவர்ச்சியூட்டுகிறது.

எஞ்சின்

எஞ்சின்

புதிய ஹீரோ கிளாமர் பைக்கின் எஞ்சினில் மாற்றங்கள் இல்லை. முந்தைய மாடலில் பயன்படுத்தப்பட்ட அதே 124.7சிசி எஞ்சின்தான் இந்த புதிய மாடலிலும் செயல்புரிகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 9 பிஎச்பி பவரையும், 10.35 என்எம் டார்க்கையும் அளிக்கும். 4 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் கொண்டது.

மைலேஜ்

மைலேஜ்

புதிய கிளாமர் பைக்கின் மைலேஜ் விபரத்தை ஹீரோ வெளியிடவில்லை. முந்தைய மாடல் லிட்டருக்கு 70 கிமீ வரை மைலேஜ் தருவதாக இருந்தது. இந்த பைக்கில் 13.6 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டிருக்கிறது.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

அனலாக்- டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் பொருத்தப்பட்டிருக்கிறது. ஸ்பீடோமீட்டர் அனலாக்கிலும், ஓடோமீட்டர், எரிபொருள் மானி போன்றவை டிஜிட்டல் திரையிலும் தெரிந்துகொள்ளும் வசதி இருக்கிறது. முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் 5 ஸ்டெப் அட்ஜெஸ்ட் வசதி கொண்ட ஷாக் அப்சார்பரும் கொடுக்கப்பட்டுள்ளன. முன்புற சக்கரத்திற்கு 240மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்புற சக்கரத்திற்கு 130மிமீ டிஸ்க் பிரேக்கும் ஆப்ஷனலாக கிடைக்கிறது. ஸ்டாண்டர்டு மாடலில் 130 மிமீ டிரம் பிரேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.

புதிய கிளாமர் விலை விபரம்

புதிய கிளாமர் விலை விபரம்

கார்புரேட்டர், டிரம் பிரேக் மாடல்: ரூ.53,375

கார்புரேட்டர், டிஸ்க் பிரேக் மாடல்: ரூ.55,375

ப்யூவல் இன்ஜெக்ஷன், டிரம் பிரேக் மாடல்: ரூ.58,700

ப்யூவல் இன்ஜெக்ஷன், டிஸ்க் பிரேக் மாடல்: ரூ.62,750

More from DriveSpark

Article Published On: Wednesday, May 7, 2014, 17:19 [IST]
English summary
Hero MotoCorp has introduced the update version of the Glamour with some minor visual changes. The 2014 Hero Glamour starts at a price of Rs 53,375 before Taxes in Delhi. Here is what you need to know about the facelifted Glamour mileage motorcycle.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+