செம ஸ்டைலில் கூடுதல் வசதிகளுடன் புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் விற்பனைக்கு வந்தது
புதுப்பொலிவுடன், கூடுதல் வசதிகளுடன் கூடிய புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் பைக் இன்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. முந்தைய மாடலை போன்றே இரண்டு வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கிடைக்கும்.
பல்வேறு கூடுதல் அம்சங்களுடன் வந்துள்ள புதிய எக்ஸ்ட்ரீம் பைக்கின் விலை உள்ளிட்ட பல கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

இரு வேரியண்ட்டுகள்
முன்சக்கரத்தில் மட்டும் டிஸ்க் பிரேக் கொண்ட மாடல் ஒரு வேரியண்ட்டாகவும், இரு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்ட மாடல் மற்றொரு வேரியண்ட்டாகவும் விற்பனைக்கு கிடைக்கிறது.

எஞ்சின்
முந்தைய மாடலில் பயன்படுத்தப்பட்ட அதே 149.2சிசி எஞ்சின்தான் இந்த பைக்கில் பொருத்தப்பட்டிருக்கிறது. இது 14.4 பிஎஸ் பவரையும், 12.80 என்எம் டார்க்கையும் அளிக்கும். 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் கொண்டுள்ளது.

அம்சங்கள்
ஸ்டைலான டிசைனுடன் வடிவமைக்கப்பட்டிருக்கும் புதிய எக்ஸ்ட்ரீம் பைக்கில் புதிய வைசர் கொண்டதாகவும், புதிய இடத்தில் பைலட் லைட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. டிஜிட்டல் மற்றும் அனலாக் இன்ஸ்ட்ரூமெனட் கிளஸ்ட்டருடன் வந்துள்ளது. சைடு ஸ்டான்ட் எச்சரிக்கை வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது. எஞ்சின் இம்மொபைலைசரும் உண்டு. பின்புறத்தில் எல்இடி டெயில் லைட்டுகள் குறிப்பிட்டு கூறலாம். பின்புற ஃபென்டர் டிசைனும் வாடிக்கையாளர்களை கவரும்.

மொபைல் சார்ஜர்
இந்த பைக்கின் குறிப்பிடத்தக்க வசதி இருக்கைக்கு கீழே மொபைல்சார்ஜர் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த செக்மென்ட் பைக்குகளில் முதலாவதாக எக்ஸ்ட்ரீம் பைக்கில் மொபைல்சார்ஜர் வசதியுடன் வந்துள்ளது.

வண்ணங்கள்
நீலம், சிவப்பு, ஆரஞ்ச் மற்றும் வெள்ளை ஆகிய 4 வண்ணங்களில் புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் கிடைக்கும்.

விலை
முன்புற சக்கரத்தில் மட்டும் டிஸ்க் பிரேக் கொண்ட வேரியண்ட் ரூ.66,516 மும்பை எக்ஸ்ஷோரூம் விலையிலும், இருசக்கரத்திலும் டிஸ்க் பிரேக் கொண்ட மாடல் ரூ.69,530 மும்பை எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








