அட்டகாசமாக புதிய 250சிசி பைக் கான்செப்ட்: டிவிஎஸ் அறிமுகம்!
டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் தனது முதல் என்ட்ரி லெவல் ஸ்போர்ட்ஸ் பைக்கின் கான்செப்ட் மாடலை டிவிஎஸ் மோட்டார்ஸ் காட்சிக்கு வைத்துள்ளது.
டிவிஎஸ் டிரேக்கன் எக்ஸ்21 என்ற பெயரிலான இந்த புதிய கான்செப்ட் பைக் நேக்டு ஸ்டைல் டிசைனில், பல சிறப்பம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளது.

தோற்றம்
அலுமினியம் ட்ரெல்லிஸ் ஃப்ரேம் கொண்ட இந்த புதிய கான்செப்ட் பைக்கில் பகல்வேர ரன்னிங் விளக்குகளுடன் கூடிய எல்இடி ஹெட்லைட் பொருத்தப்பட்டுள்ளது.

எஞ்சின்
இந்த புதிய டிவிஎஸ் டிரேக்கன் கான்செப்ட் பைக்கில் சிங்கிள் சிலிண்டர் கொண்ட 250சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் கொண்டதாக இருக்கும்.

மோனோஷாக் சஸ்பென்ஷன்
பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பர் கொண்டதாக இருக்கும்.

எக்சாஸ்ட் சிஸ்டம்
புகைப்போக்கி குழாய் எஞ்சினுக்கு கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.

பெட்டல் டிஸ்க் பிரேக்
இந்த கான்செப்ட் பைக்கின் முன்புறத்தில் பெட்டல் டிஸ்க் பிரேக் அமைப்பும், பின்புறத்தில் ஏபிஎஸ் பிரேக் சிஸ்டத்துடன் கூடிய டிஸ்க் பிரேக் அமைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.

தயாரிப்பு நிலை மாடல்
அடுத்த ஆண்டு துவக்கத்தில் இதன் தயாரிப்பு நிலை மாடல் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








