மிரள வைக்கும் டிசைன்... புதிய டுகாட்டி டயாவெல் அறிமுகம்!
சிறிய மாறுதல்களுடன் கூடிய 2014 மாடல் டுகாட்டி டயாவெல் பைக் ஜெனீவா மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் அரங்கில் புதிய டயாவெல் பைக் தற்போது காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
சிறிய மாற்றங்கள் என்றாலும், அவை இந்த புதிய டயாவெல் பைக்கின் தோற்றத்துக்கு கூடுதல் பொலிவையும், கம்பீரத்தையும் வழங்குகிறது. புதிய டயாவெல் படங்கள் மற்றும் கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

எல்இடி ஹெட்லைட்
புதிய டுகாட்டி டயாவெல் பைக்கில் முக்கிய மாற்றமாக எல்இடி ஹெட்லைட்டை கூறலாம்.

எஞ்சின் பவர்
டுகாட்டி டயாவெல் பைக்கின் எஞ்சின் 162 எச்பி பவரையும், 130 என்எம் டார்க்கையும் அளிக்கும்.

எடை
முந்தைய மாடலைவிட 5 கிலோ எடை குறைந்துள்ளது. ஆனால், பவர் டெலிவிரியில் மாற்றம் இல்லை. அதேவேளை, டார்க் சிறிது கூடுதலாக வெளிப்படுத்தும்.

டியூவல் எக்சாஸ்ட்
புதிய டுகாட்டி பவர் க்ரூஸர் பைக்கின் டியூவல் எக்சாஸ்ட் டிசைன் மறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

வண்ணங்கள்
மூன்று விதமான வண்ணக் கலவையில் புதிய டுகாட்டி கிடைக்கும்.

விலை
ஐரோப்பிய நாடுகளில் இந்த பைக் இன்னும் சில வாரங்களில் விற்பனைக்கு வர இருக்கிறது. 17,995 டாலர் விலை முதல் 20,995 டாலர் வரையிலான விலை பட்டியலில் வசதிகளுக்கு தக்கவாறு கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








