2014 மாடல் ஹயோசங் ஜிடி252ஆர் பைக்கின் படம் இணையத்தில் கசிந்தது
சிறிய மாற்றங்களுடன் 2014 மாடலாக வரும் ஹயோசங் ஜிடி250ஆர் பைக்கின் படம் இணையதளத்தில் கசிந்துள்ளது. எனவே, இந்த பைக் விரைவில் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு வருகிறது.
இந்த புதிய மாடலின் படத்தை டாப்கியர் தளம் வெளியிட்டிருக்கிறது. ஹயோசங் ஜிடி650ஆர் பைக்கின் டிசைன் அம்சங்களை இந்த புதிய மாடலை ஒத்ததாகவே இருக்கிறது.

மாற்றங்கள்
புதிய ஹெட்லைட்டுகள், புதிய ஃபேரிங் பேனல்கள் மூலம் பைக்கின் தோற்றத்தில் கூடுதல் பொலிவு தெரிகிறது. இந்த மாற்றங்கள்தான் ஜிடி650ஆர் பைக்கின் தோற்றத்தை ஒத்ததாக காட்டுகிறது.
(படத்தில் புதிய மாடல் பைக் கொடுக்கப்பட்டுள்ளது)

எக்சாஸ்ட் பினிஷ்
ஹயோசங் ஜிடி650ஆர் பைக்கின் எக்சாஸ்ட் குழாய் கருப்பு வண்ணத்தில் மேட் பினிஷ் செய்யப்பட்டிருக்கும். ஆனால், இந்த பைக்கில் அலுமினியம் பூச்சு கொடுக்கப்பட்டுள்ளது.

எஞ்சின்
2014 மாடல் ஹயோசங் ஜிடி250ஆர் பைக்கின் எஞ்சினில் மாற்றங்கள் இல்லை. 28 பிஎச்பி பவரையும், 22 என்எம் டார்க்கையும் அளிக்கும் அதே 249 சிசி ட்வின் சிலிண்டர் எஞ்சின்தான் பொருத்தப்பட்டிருக்கிறது. 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டது.

விலை
2014 ஹயோசங் ஜிடி650ஆர் பைக்குக்கு இந்தியாவில் முன்பதிவு துவங்கப்பட்டுவிட்டது. ரூ.3.11 லட்சம் மும்பை எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வருகிறது,


Click it and Unblock the Notifications








