அட்டகாசமான புதிய இந்தியன் மோட்டார்சைக்கிள் மாடல் அறிமுகம்!
அமெரிக்காவில் நடந்த மோட்டார்சைக்கிள் ராலி நிகழ்ச்சியில் புதிய மோட்டார்சைக்கிள் ஒன்றை இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனம் அறிமுகம் செய்தது. 2015 இந்தியன் ஸ்கவுட் என்ற பெயரில் வந்திருக்கும் இந்த புதிய மோட்டார்சைக்கிள் அறிமுக நிகழ்ச்சியில் பிரபல சினிமா நட்சத்திரங்களும் பங்கு கொண்டனர்.
70 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் தனது ஸ்கவுட் பிராண்டு பெயரில் இந்த புதிய க்ரூஸர் ரக மோட்டார்சைக்கிள் மாடலை இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. டிசைன், அதிசக்திவாய்ந்த எஞ்சின், வசதிகள் என வழக்கம்போல் இந்தியன் மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு உரிய தனித்துவ அம்சங்களுடன் வாடிக்கையாளர்களை கவர வந்துள்ளது.
கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

கூடுதல் தகவல்கள்
அடுத்தடுத்த ஸ்லைடுகளில் கூடுதல் தகவல்களை காணலாம்.

எஞ்சின்
இந்த புதிய இந்தியன் ஸ்கவுட் பைக்கில் 100 எச்பி பவரையும், 97.7 என்எம் டார்க்கையும் அளிக்கும் 1,133சிசி லிக்யூடு கூல்டு வி- ட்வின் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் கொண்டது.

சக்திவாய்ந்த பைக்
அதிசக்திவாய்ந்த பைக்கை முதல்முறையாக ஓட்டுபவர்கள் எளிதாக கையாளும் வகையில் இந்த புதிய க்ரூஸர் பைக்கை வடிவமைத்துள்ளதாக இந்தியன் மோட்டார்சைக்கிள் பெருமிதம் தெரிவித்துள்ளது.

எடை
இந்த புதிய இந்தியன் ஸ்கவுட் பைக் 250 கிலோ எடை கொண்டது.

வண்ணங்கள்
4 விதமான வண்ணங்களில் அமெரிக்காவில் விற்பனைக்கு கிடைக்கும். இதில், மேட் ஃபினிஷ் செய்யப்பட்ட மாடல்களும் அடங்கும்.

விலை
10,999 அமெரிக்க டாலர் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.


Click it and Unblock the Notifications








