புதிய கவாஸாகி நின்ஜா எச்2 பைக்கின் படங்கள் வெளியானதால் பரபரப்பு!

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் புதிய கவாஸாகி நின்ஜா எச்2 பைக்கின் படங்கள் இணைய தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதிய சூப்பர்சார்ஜ்டு எஞ்சினுடன் வரும் இந்த புதிய பைக்கின் டீசர்களை வெளியிட்டு ஆவலைத் தூண்டிய கவாஸாகி நிறுவனம் இந்த பைக்கை இன்னும் சில மணிநேரத்தில் ஜெர்மனியின் கோல்ன் நகரில் நடந்து வரும் மோட்டார்சைக்கிள் ஷோவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதனிடையே, இந்த பைக்கின் அதிகாரப்பூர்வ படங்கள் இணைய தளங்களில் கசிந்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


புதிய மாடல்

புதிய மாடல்

கவாஸாகியின் பிரபலமான நின்ஜா இசட்எக்ஸ்-14ஆர் சூப்பர் பைக்கிற்கு மாற்றாக இந்த புதிய சூப்பர்ஸ்போர்ட் ரக பைக் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

எஞ்சின்

எஞ்சின்

இந்த புதிய பைக்கில் 203 பிஎச்பி ஆற்றலை வழங்கும் 4 சிலிண்டர்கள் கொண்ட சூப்பர்சார்ஜ்டு எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும் என தகவல்கள் கூறுகின்றன. கவாஸாகியின் அதிசக்திவாய்ந்த பைக் மாடலாகவும் இது குறிப்பிடப்படுகிறது.

பெர்ஃபார்மென்ஸ்

பெர்ஃபார்மென்ஸ்

மணிக்கு 300 கிமீ வேகத்திற்கும் அதிகமாக செல்லத்தக்க அம்சங்களுடன் வரும் என தெரிவிக்கப்படுகிறது.

வல்லுனர் குழு

வல்லுனர் குழு

கவாஸாகி நின்ஜா இசட்எக்ஸ்-6ஆர் பைக்கில் பொருத்தப்பட்டிருக்கும் 636சிசி எஞ்சினை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய சூப்பர்சார்ஜ்டு எஞ்சின் வடிவமைக்கப்பட்டிருப்பதாகவும், கவாஸாகியின் ஏரோஸ்பேஸ் வல்லுனர்கள் குழுவின் ஆலோசனைகளின்படி தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 30, 2014, 13:17 [IST]
English summary
2015 Kawasaki Ninja H2 super bike's official photos have leaked online.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+