லாஜ் ஜென்சன் கஃபே ரேஸர்... இது ஒரு கான் டிசைன்ஸ் வெளியீடு!
லண்டனை சேர்ந்த பிரபல கார் கஸ்டமைஸ் நிறுவனமான ஏ.கான் நிறுவனம் புதிய கஸ்டமைஸ் செய்யப்பட்ட கஃபே ரேஸர் பைக் மாடலை அறிமுகம் செய்துள்ளது.
முழுவதும் கருப்பு நிற பெயிண்ட்டில் ஆங்காங்கே சில்வர் பினிஷிங்கும், தங்க நிற பிரேக் காலிபர்களுடன் ஹைலைட் செய்யப்பட்டிருக்கும் இந்த புதிய கஃபே ரேஸர் ரக பைக் அறிமுக விழாவில் பார்வையாளர்களையும், பத்திரிக்கையாளர்களையும் கவர்ந்தது. இந்த அசத்தலான கஸ்டமைஸ் பைக் மாடல் பற்றிய கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

லிமிடேட் எடிசன்
லாஜ் ஜென்சன் என்ற பெயரில் இந்த புதிய கஸ்டமைஸ் பைக் மாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. மொத்தமாக 10 எண்ணிக்கையில் மட்டுமே லிமிடேட் எடிசன் மாடலாக விற்பனை செய்யப்பட உள்ளன.

எஞ்சின்
வி2 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும் இந்த பைக் 0 - 96 கிமீ வேகத்தை 4 வினாடிகளுக்குள் கடந்து விடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாப் ஸ்பீடு
அதிகபட்சமாக மணிக்கு 257 கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டது.

யூரோ- 4 எஞ்சின்
இதுதான் உலகின் முதல் யூரோ-4 மாசுக்கட்டுப்பாட்டு அம்சம் கொண்ட பைக்காக கான் டிசைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், சில ஆட்டோமொபைல் தளங்களில் பிஎம்டபிள்யூ சி600 பைக் ஏற்கனவே யூரோ-4 அம்சத்துடன் வந்துள்ளதாக தெரிவிக்கின்றன.

அம்சங்கள்
கை வேலைப்பாடுகள் நிறைந்த இருக்கைகள், டிரில் செய்யப்பட்ட பெடல்கள், சிறப்பான ஹேண்டில்பார், ஹெட்லைட் மற்றும் எல்இடி டெயில் லைட்டுகள் என ஏராளமான சிறப்பம்சங்களை கொண்டிருக்கிறது. மேலும், டென்மார்க்கில் தயாரிக்கப்படும் இந்த பைக்கை வாடிக்கையாளர் விருப்பம்போல் கஸ்டமைஸ் செய்துகொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை
விலை விபரங்கள் வெளியிடப்படவில்லை. இங்கிலாந்தை சேர்ந்த வாடிக்கையாளர்கள் ஏ.கான் டிசைன் நிறுவனம் வழியாக ஆர்டர் செய்து இந்த பைக்கை வாங்கிக் கொள்ளலலாம்.


Click it and Unblock the Notifications








