சிறுவர்களுக்கான புதிய எலக்ட்ரிக் பைக்கை வடிவமைத்த அக்னி மோட்டார்ஸ்!
சிறுவர்கள் ஓட்டுவதற்கு ஏற்ற அம்சங்கள் கொண்ட மினி பைக் மாடலை அக்னி மோட்டார்ஸ் வடிவமைத்துள்ளது. குஜராத்தை சேர்ந்த அக்னி மோட்டார்ஸ் நிறுவனம் மின் மோட்டார்களை தயாரிப்பதில் பிரபலமானது.
மேலும், எலக்ட்ரிக் பைக்குகளுக்கான பந்தயங்களிலும் பங்கேற்று வருகிறது. இந்த நிலையில், தனது பந்தய பைக் அடிப்படையில் புதிய மினி எலக்ட்ரிக் பைக்கை அக்னி வடிவமைத்துள்ளது.

மினி அக்னி ஸீ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த புதிய மோட்டார்சைக்கிளில் 15 எச்பி பவரை அளிக்கும் 36 வோல்ட் திறன் கொண்ட லீட் ஆசிட் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது. விரைவில் லித்தியம் அயான் பேட்டரியையும் இந்த மோட்டார்சைக்கிளில் பொருத்தி விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.
5 வயதுக்கு மேல் உள்ள சிறுவர்கள் ஓட்டுவதற்கு ஏதுவாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 110 கிமீ வரை டாப் ஸ்பீடு கொண்ட இந்த பைக்கை சிறுவர்கள் பயிற்சி பெறும் வரை குறைந்த வேகத்தில் செல்லும் வகையில் கட்டுப்படுத்திக் கொள்ள முடியும்.
பைக் பந்தயங்களுக்காக சிறு வயதிலிருந்து பயிற்சி பெற நினைப்பவர்களுக்கு இந்த புதிய மினி எலக்ட்ரிக் பைக் சிறந்த சாய்ஸ் என அக்னி மோட்டார்ஸ் தெரிவிக்கிறது.


Click it and Unblock the Notifications








