பவர்ஃபுல் எலக்ட்ரிக் பைக்கை காட்சிப்படுத்திய ஆரியான் மோட்டார்ஸ்!
டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பெரிய நிறுவனங்கள் மட்டுமில்லாமல், பல புதிய நிறுவனங்களுக்கும் தங்களது தொழில்நுட்பத்தை பரைசாற்றிக் கொள்ளும் தளமாக அமைந்தது.
அந்த வகையில், புனேயை சேர்ந்த ஆரியான் என்ற நிறுவனம் தனது முதல் எலக்ட்ரிக் பைக் கான்செப்ட்டை பார்வைக்கு வைத்திருந்தது. புரோட்டான் என்ற பெயரிலான இந்த புதிய பைக் கான்செப்ட்டின் மின் மோட்டார் மற்றும் டிரான்ஸ்மிஷனின் இயக்கத்தை எலக்ட்ரிக் கன்ட்ரோலர்கள் வழியாக கட்டுப்படுத்தும் வகையில் இந்த பைக்கை உருவாக்கியுள்ளனர்.

இந்த பிரத்யேக கட்டுப்பாட்டு சாதனத்தை எல்டெக் எலெக்ட்ரோடிசைன்ஸ் என்ற நிறுவனத்தின் உதவியுடன் ஆரியான் நிறுவனத்தின் எஞ்சினியர்கள் வடிவமைத்துள்ளனர். இந்த பைக்கின் பிரத்யேக அம்சமாக கூறப்படும் இந்த எலக்ட்ரிக் கன்ட்ரோலரை எந்தவொரு பைக்குகளிலும் சிறிய மாறுதல்களை செய்து எளிதாக பொருத்திக் கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புரோட்டான் பைக்கில் 24 எச்பி ஆற்றலை வழங்கும் 72 வோல்ட் டிசி மின் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மின் மோட்டாரை அக்னி நிறுவனத்திடமிருந்து பெற்று பொருத்தியுள்ளனர். முழுமையாக சார்ஜ் செய்வதற்கு 5 மணி நேரம் பிடிக்கும். ஒருமுறை முழு சார்ஜ் செய்தால் 150 கிமீ தொலைவு வரை செல்ல முடியும்.
0- 100 கிமீ வேகத்தை புரோட்டான் எலக்ட்ரிக் பைக் வெறும் 8.6 வினாடிகளில் கடந்துவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 140 கிமீ வேகம் வரை செல்லும் கட்டமைப்பு கொண்டது.


Click it and Unblock the Notifications