விரைவில் ஷோரூமுக்கு வரும் புதிய பஜாஜ் பல்சர் 200எஸ்எஸ்!
அடுத்ததாக பல்சர் பிராண்டில் புதிய பைக்கை பஜாஜ் ஆட்டோ களமிறக்க உள்ளது. நேக்டு ஸ்டைல் டிசைனில் விற்பனை செய்யப்படும் பஜாஜ் பல்சர் 200என்எஸ் பைக்கின் ஃபேர்டு வெர்ஷனாக வரும் இந்த புதிய பைக் மாடல் தற்போது இறுதிக்கட்ட சோதனைகளை முடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பஜாஜ் பல்சர் 200என்எஸ் பைக்கில் பொருத்தப்பட்டிருக்கும் அதே எஞ்சின்தான் இந்த புதிய பைக்கிலும் இடம்பெற்றிருக்கும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 23.52 பிஎஸ் பவரையும், 18.3 என்எம் டார்க்கையும் அளிக்கும். இதில், 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டிருக்கும்.

புதிய பஜாஜ் பல்சர் 200எஸ்எஸ் பைக்கில் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் தொழில்நுட்பம் மற்றும் ஏபிஎஸ் பிரேக் வசதியையும் கொண்டிருக்கும் என தெரிகிறது. இதேபோன்று, கேன் சைலென்சருடன் புதிய பல்சர் 200எஸ்எஸ் வருகிறது.

அடுத்த ஓரிரு மாதங்களில் விற்பனைக்கு வரும் இந்த புதிய பைக் முழுவதும் ஃபேரிங் பேனல்கள் கொண்ட குறைவான விலை மாடலாக இருக்கும் என்பதால் இளைஞர்களை பெரிதும் கவரும் வாய்ப்பு இருக்கிறது.


Click it and Unblock the Notifications








