இலங்கை அரசுக்கு 1.25 லட்சம் டிஸ்கவர் பைக்குகளை சப்ளை செய்யும் பஜாஜ்!
இலங்கை அரசுக்கு 1.25 லட்சம் பைக்குகளை சப்ளை செய்வதற்கான ஆர்டரை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் பெற்றிருக்கிறது.
இலங்கைக்கான பஜாஜ் ஆட்டோவின் அங்கீகாரம் பெற்ற வினியோகஸ்தரான டேவிட் பியரிஸ் மோட்டார் கம்பெனி இந்த ஆர்டரை பெற்றிருக்கிறது.

இந்த ஆர்டரின் படி, இலங்கை அரசுக்கு 1.25 லட்சம் டிஸ்கவர் எம் பைக்குகளை சப்ளை செய்ய உள்ளதாக மும்பை பங்கு சந்தையில் இன்று பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஏற்கனவே 48,000 டிஸ்கவர் எம் பைக்குகளை சப்ளை செய்துவிட்டதாகவும், மீதமுள்ள பைக்குகளை அடுத்த 3 முதல் 4 மாதங்களில் சப்ளை செய்யப்பட்டுவிடும் என்றும் பஜாஜ் ஆட்டோ தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ரூ.50,530 எக்ஸ்ஷோரூம் விலையில் பஜாஜ் டிஸ்கவர் எம் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








