விரைவில் வருகிறது புதிய 150சிசி பஜாஜ் டிஸ்கவர் பைக்: விபரம்!
செமி ஃபேரிங் ஸ்டைலிலான புதிய 150சிசி டிஸ்கவர் பைக்கை பஜாஜ் ஆட்டோ விரைவில் விற்பனைக்கு கொண்டு வருகிறது.
டிஸ்கவர் குடும்பத்தில் இணைய இருக்கும் இந்த புதிய 150சிசி பைக் தற்போது தீவிரமாக சோதனை செய்யப்பட்டு வருகிறது. முக்காடு போட்டு சோதனையில் இருந்த அந்த புதிய 150சிசி டிஸ்கவர் பைக்கை ரகசியமாக படம்பிடித்து ஓவர்டிரைவ் இணையதளம் வெளியிட்டிருக்கிறது.

அம்சங்கள்
டிஸ்க் பிரேக், பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பர் ஆகியவை தற்போது டிஸ்கவர் குடும்பத்தில் டாப் மாடலாக விற்பனை செய்யப்பட்டு வரும் டிஸ்கவர் 125எஸ்டி பைக்கின் அடிப்படையிலானதாக தெரிகிறது.

எஞ்சின்
டிஸ்கவர் எஃப்150 என்ற பெயரில் அழைக்கப்படும் இநத புதிய பைக்கில் சிங்கிள் சிலிண்டர் 150சிசி டிடிஎஸ்ஐ எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன. இந்த எஞ்சின் 14 பிஎஸ் பவர் கொண்டதாக இருக்கும்.

விலை
பல்சர் 150 பைக்கைவிட குறைவான விலையில் இந்த புதிய டிஸ்கவர் பைக் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. விலை குறைவான ஸ்போர்ட்ஸ் ஸ்டைல் மாடலாக இந்த புதிய டிஸ்கவர் பைக்கை நிலைநிறுத்த பஜாஜ் திட்டமிட்டுள்ளது.

நேக்டு மாடல்
ஃபேரிங் பேனல்கள் பொருத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டு வரும் டிஸ்கவர் எஃப்150 மாடலின் நேக்டு பாடி ஸ்டைல் கொண்ட டிஸ்கவர் 150 மாடலையும் பஜாஜ் ஆட்டோ விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக ஆட்டோமொபைல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








