புதிய இரட்டை வண்ணங்களில் பஜாஜ் பல்சர் பைக்குகள் அறிமுகம்!
புதிய இரட்டை வண்ணங்களில் பஜாஜ் பல்சர் பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன. விலையில் எந்த மாற்றங்களும் இல்லை.
பல்சர் வரிசையில் 150, 180 மற்றும் 220 மாடல்களில் இந்த புதிய இரட்டை வண்ணக் கலவையுடன் கிடைக்கும். பியர்ல் மெட்டாலிக் ஒயிட், சஃபையர் புளூ மற்றும் காக்டெயில் ஒயின் ரெட் ஆகிய மூன்று இரட்டை வண்ணக் கலவையில் புதிய மாடல்கள் கிடைக்கும்.

எஞ்சின் மற்றும் டிசைனில் எவ்விதமான மாற்றங்களும் செய்யப்படவில்லை. விற்பனையில் இருக்கும் போட்டியை கருத்தில்கொண்டு வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் இந்த புதிய வண்ணங்களில் பல்சர் பைக்குகள் வந்துள்ளன. ஆனால், இந்த வண்ணங்கள் கவர்ச்சியாக இருக்கிறதா என்பதை வாடிக்கையாளர்கள்தான் கூற வேண்டும்.


Click it and Unblock the Notifications








