ஆக.11ல் விற்பனைக்கு வருகிறது புதிய பஜாஜ் டிஸ்கவர் 150எஸ்!
வரும் 11ந் தேதி டிஸ்கவர் வரிசையில் புதிய 150சிசி பைக்கை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது.
டிஸ்கவர் 150எஸ் என்ற பெயரில் வரும் இந்த புதிய பைக் மாடலுக்கு டீலர்களில் முன்பதிவும் நடந்து வருகிறது. இந்த புதிய டிஸ்கவர் மாடல் டிஸ்கவர் 150எஸ் மற்றும் டிஸ்கவர் 150எஃப் ஆகிய இரண்டு மாடல்களில் இரண்டு விதமான பாடி ஸ்டைல் கொண்ட மாடல்களில் வருகிறது.

ஒன்று நேக்டு டிசைனிலும் மற்றும் செமி ஃபேரிங் டிசைனிலும் இருக்கும். உற்பத்தி செலவீனத்தை கட்டுப்படுத்தும் வகையில், ஏற்கனவே விற்பனையில் இருக்கும் டிஸ்கவர் பைக்குகளின் பல உதிரிபாகங்கள் இந்த பைக்கிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், தற்போது விற்பனையில் இருக்கும் டிஸ்கவர் 125எஸ்டி பைக்கின் டிசைன் அம்சங்கள் மற்றும் உதிரிபாகங்கள் டிஸ்கவர் 150எஸ் மாடலில் பயன்படுத்தியுள்ளனர்.
புதிய பஜாஜ் டிஸ்கவர் 150எஸ் பைக்கில் புதிய 150சிசி டிடிஎஸ்- ஐ எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இது 13.8 எச்பி பவரை அளிக்கும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டிருக்கும்.
முன்புறத்தில் டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் டிரம் பிரேக்கும் கொண்டதாக இருக்கும். பல்சரைவிட குறைவான விலையில் இந்த புதிய டிஸ்கவர் பைக்குகள் நிலைநிறுத்தப்படும்.


Click it and Unblock the Notifications








