2016ல் விற்பனைக்கு வருகிறது பல்சர் சிஎஸ்400: விபரங்கள்
டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பஜாஜ் ஆட்டோவின் அரங்கத்திற்கு வந்த பார்வையாளர்களை அங்கு காட்சிக்கு நிறுத்தப்பட்டிருந்த பல்சர் சிஎஸ்400 மாடல் பெரிதும் கவர்ந்தது. முரட்டு தோற்றத்தில் நின்றிருந்த இந்த பைக்கின் அறிமுகம் குறித்து பலர் வினா எழுப்பி சென்றனர்.
இந்த நிலையில், இந்த புதிய பைக்கின் அறிமுக விபரங்கள் வெளியாகியுள்ளன. வரும் 2016ம் ஆண்டில் நேக்டு ஸ்டைல் டிசைன் கொண்ட இந்த புதிய ஸ்ட்ரீட் பைக்கை பஜாஜ் ஆட்டோ விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. ஏராளமான சிறப்பம்சங்களுடன் வரும் இந்த புதிய பைக்கை பற்றிய சில கூடுதல் விபரங்கள், படங்களை ஸ்லைடரில் காணலாம்.

எஞ்சின்
கேடிஎம் டியூக் 390 பைக்கில் பொருத்தப்பட்டிருக்கும் 373.6சிசி எஞ்சினின் டியூனிங்கை மாற்றி இதில் பொருத்த இருக்கின்றனர். 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் கொண்டிருக்கும்.

பவர்
இது 43 பிஎச்பி பவர் கொண்டதாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. இது போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது சிறந்த பெர்ஃபார்மென்ஸ் கொண்டதாக இருக்கும்.

ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம்
முன்புறம் மற்றும் பின்புறத்தில் டியூவல் டிஸ்க் பிரேக் கொண்டதாக வருகிறது. மேலும், ஏபிஎஸ் பிரேக் சிஸ்டமும் நிரந்தரமாக இடம்பெற்றிருக்கும்.

மோனோ சஸ்பென்ஷன்
பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பர் அமைப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. முன்புறத்தில் அப்சைடு டவுன் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகள் கொண்டிருக்கும்.

டிஜிட்டல் கன்சோல்
இந்த பைக்கில் முழுவதுமான டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர் கன்சோல் கொடுக்கப்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications








