புதிய வண்ணங்களில் பல்சர் 180 பைக் அறிமுகம்! - விபரம்
மூன்று புதிய இரட்டை வண்ண கலவையில் பல்சர் 180 பைக்கை அறிமுகம் செய்துள்ளது பஜாஜ் ஆட்டோ நிறுவனம்.
சஃபையர் புளூ, பியர்ல் மெட்டாலிக் ஒயிட் மற்றும் காக்டெயில் ஒயின் ரெட் ஆகிய வண்ணங்களில் இனி பல்சர் 180 பைக் கிடைக்கும். இது இரட்டை வண்ணக் கலவை கொண்டதாக வந்துள்ளதால், வாடிக்கையாளர்களை கவரும்.

மேலும், பஜாஜ் விற்பனையில் மிக முக்கிய பங்களிப்பை அளித்தும் வரும் பல்சர் 150 பைக்கின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
தோற்றத்தில் சிறிய மாறுதல்களுடன், யமஹா எஃப்ஸீ, ஹோண்டா யூனிகார்ன் போன்று மோனோஷாக் அப்சார்பர் கொண்டதாகவும் வர இருக்கிறது பல்சர் 150 பைக். தற்போது பல்சர் 200என்எஸ் பைக்கில் மட்டுமே மோனோஷாக் அப்சார்பர் பொருத்தப்பட்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.
இன்றைய ஃபேஸ்புக் வீடியோ இதோ உங்களுக்காக ரெடி!!


Click it and Unblock the Notifications








