டிஸ்கவர் 125 பைக்கிற்கு விடை கொடுக்க பஜாஜ் முடிவு!
இந்திய இருசக்கர வாகன மார்க்கெட்டின் வெற்றிகரமான மாடல்களில் ஒன்றான டிஸ்கவர் 125 பைக்கிற்கு விடை கொடுக்க பஜாஜ் ஆட்டோ முடிவு செய்துள்ளது. சமீபத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட டிஸ்கவர் 125எம் பைக்கை அந்த இடத்தில் நிலைநிறுத்த அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.
வாடிக்கையாளர்களின் மனநிலையை மனதில் கொண்டு 11 ஆண்டுகள் பழமையான டிஸ்கவர் மாடலை விலக்கிக் கொள்ள பஜாஜ் ஆட்டோ முடிவு செய்துள்ளது. டிஸ்கவர் 125 மாடலுக்கும், டிஸ்கவர் 125எம் மாடலுக்குமான எஞ்சின்களில் வேறுபாடு உண்டு. பழைய மாடலில் 2 வால்வுகள் கொண்ட 124.6சிசி எஞ்சின் கொண்டது. புதிய மாடலின் 124.6சிசி எஞ்சினில் 4 வால்வுகள் கொண்டது.

மேலும், பழைய டிஸ்கவர் 125 மாடலைவிட புதிய டிஸ்கவர் 125எம் மாடலின் வீல் பேஸ் குறைக்கப்பட்டுள்ளது. சிறந்த கையாளுமையை வழங்குவதற்காக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பழைய டிஸ்கவர் 125 இடத்தை புதிய டிஸ்கவர் 125எம் மாடல் தக்க வைக்கும் என்ற நம்பிக்கையில் இந்த முடிவை பஜாஜ் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது டிஸ்கவர் பிராண்டில் டிஸ்கவர் 100, 100M, 100T, 125, 125T, 125ST மற்றும் 125M ஆகிய மாடல்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
காணத்தவறாதீர்: இன்றைய ஃபேஸ்புக் வீடியோ இதோ உங்களுக்காக...!


Click it and Unblock the Notifications








