பைக் பிரியர்களுக்கான அடுத்து ஓர் பிரம்மாண்ட திருவிழா: டோணி அறிவிப்பு
இன்னும் ஒரு வாரத்தில் கோவாவில் இந்திய பைக் வீக் திருவிழா நடைபெற இருக்கும் நிலையில், அடுத்ததாக பைக் பிரியர்களுக்கான ஓர் புதிய திருவிழாவை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மஹேந்திர சிங் டோணி அறிவித்துள்ளார்.
The Bike Festival of India(BFI) என்ற பெயரில் மிக பிரம்மாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டு வரும் இந்த புதிய பைக் திருவிழாவிற்காக நாடு முழுவதும் பைக் பேரணியும் நடத்தப்பட உள்ளது. பாதுகாப்பான பைக் பயணம் என்ற தாத்பரியத்துடன் நடத்தப்பட இருக்கும் இந்த பைக் பயணத்தை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற செய்யும் வகையில் நடைபெற இருக்கிறது.

மேலும், பிஎஃப்ஐ திருவிழாவின் ஒரு பகுதியாக வரும் மார்ச் மாதம் புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் ஒரு பைக் ரேஸும் நடத்தப்பட உள்ளது. இந்த பைக் திருவிழாவை டோணியின் நெருங்கிய நண்பர் நடத்தும் ரித்தி ஸ்போர்ட்ஸ் என்ற நிறுவனமும், ஈவண்ட் கேபிட்டல் என்ற நிகழ்ச்சி ஏற்பாடு நிறுவனமும் இணைந்து நடத்த உள்ளன.
வரும் அக்டோபர் மாதம் முதலாம் ஆண்டு இந்திய பைக் திருவிழா நடைபெற இருக்கிறது.


Click it and Unblock the Notifications








