இந்த உருமாறி நிற்கும் பைக் எது என்று கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்?

தனித்துவத்தை வெளிக்காட்டும் வகையில் பைக்குகளை கஸ்டமைஸ் செய்யும் கலாச்சாரம் இளைஞர்களிடம் வேகமாக பரவி வருகிறது. வசதிக்கும், விருப்பத்திற்கும் தகுந்தாற்போன்று பைக்குகளின் மாற்றங்கள் அமைகிறது.

ஆனால், பைக்குகளை கஸ்டமைஸ் செய்வதற்கு முன்பாக, அதற்கான அடிப்படை பைக்குகளை தேர்வு செய்வதிலும் அல்லது இருக்கும் பைக்குகளில் கஸ்டமைஸ் செய்ய முடியுமா என்பதிலும் குழப்பம் நிலவுகிறது.

இந்த நிலையில், இந்தியாவின் அதிகம் விரும்பப்படும் பைக் மாடல்களில் ஒன்றை பாம்பே கஸ்டம் நிறுவனம் மிக மிக நேர்த்தியாக கஸ்டமைஸ் செய்து அசத்தியிருக்கிறது. சாலையெங்கும் நீக்கமற நிறைந்துவிட்ட அந்த கஸ்டமைஸ் செய்யப்பட்ட மாடலின் படங்கள் மற்றும் கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

 கஃபே ரேஸர்

கஃபே ரேஸர்

தற்போது மீண்டும் கஃபே ரேஸர் ஜுரம் பரவியிருப்பதால், இந்த பைக் கஃபே ரேஸர் ஸ்டைலில் மாற்றப்பட்டிருக்கிறது.

ஒற்றை இருக்கை

ஒற்றை இருக்கை

சாதாரண கஃபே ரேஸர் மாடல்களின் இருக்கை நீளவாக்கிலான ஒற்றையாக இருக்கையாக இருக்கும். ஆனால், இந்த பைக்கில் சற்று வித்தியாசப்படும் வகையில் ராயல் என்ஃபீல்டு பைக்குகளில் விரும்பி பொருத்தப்படும், ஒற்றை இருக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

 பெட்ரோல் டேங்க்

பெட்ரோல் டேங்க்

கஃபே ரேஸர் ஸ்டைலிலான புதிய பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டிருக்கிறது. மேலும், பாம்பே கஸ்டம் ஒர்க்ஸ் என்ற எழுத்துக்கள் பொன் நிறத்தில் பொறிக்கப்பட்டிருக்கின்றன.

மட்கார்டு

மட்கார்டு

பின்புற சக்கரத்திற்கு மட்கார்டு வித்தியாசமாக டிசைன் செய்யப்பட்டுள்ளன.

 ஹேண்டில்பார்

ஹேண்டில்பார்

கஃபே ரேஸர் தோற்றத்தை வழங்கும் ஹேண்டில்பார் மற்றும் ரியர் வியூ கண்ணாடிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஹெட்லைட்

ஹெட்லைட்

ஹெட்லைட் ஸ்கூப் எடுக்கப்பட்டு, வட்ட வடிவ ஹெட்லைட் பொருத்தப்பட்டுள்ளது.

தொடர்புக்கு...

தொடர்புக்கு...

இந்த கஸ்டம் பைக் குறித்து கூடுதல் தகவல்களை அறிந்து கொள்ள விரும்புவோர், 0- 98207 76705 என்ற மொபைல் எண்ணிலும், [email protected] என்ற இமெயில் முகவரியின் மூலமும் தொடர்பு கொள்ளலாம்.

இது எந்த பைக் தெரிகிறதா?

இது எந்த பைக் தெரிகிறதா?

இது எந்த பைக் என்று கண்டுபிடித்துவிட்டீர்களா? க்ளூ என்று கேட்பவர்களுக்கு, இது ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் இல்லை. விரைவில் கமென்ட் பாக்ஸில் எந்த பைக் என்ற விபரத்தை தெரிவிக்கிறோம்.

More from DriveSpark

Article Published On: Thursday, February 20, 2014, 12:49 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+