கஃபே ரேஸர் ஸ்டைலில் ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 பைக்!
ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 மோட்டார்சைக்கிள் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில், முதல்முறையாக இந்த மோட்டார்சைக்கிளை ஜெய்ப்பூரை சேர்ந்த ராஜ்புத்தனா கஸ்டமைஸ் நிறுவனம் தனது கைவணத்தில் கஃபே ரேஸர் ஸ்டைலுக்கு மாற்றி அசத்தியிருக்கிறது.
கடந்த 15 மற்றும் 16ந் தேதிகளில் மும்பையில் நடந்த ஹார்லி ராக் ரைடர்ஸ் சீசன்- 5 மோட்டார்சைக்கிள் திருவிழாவில் இந்த கஸ்டமைஸ் மாடல் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. மேலும், இந்த மோட்டார்சைக்கிளின் புகைப்படங்களை ஹார்லி டேவிட்சன் ஃபேஸ்புக் மூலம் வெளியிட்டுள்ளது.
படங்களையும், கூடுதல் தகவல்களையும் ஸ்லைடரில் காணலாம்.

பெயர்
கஸ்டமைஸ் செய்யப்பட்ட இந்த ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 பைக்கிற்கு 'மக்கு'(Makku) என்ற பெயரில் அழைக்கின்றனர்.

ஃப்ரேம் மாற்றங்கள்
ஃப்ரேமில் அதிக அளவில் மாற்றங்கள் செய்யப்படவில்லை. சிறிய அளவிலான மாறுதல்களுடன் ஒரு கஃபே ரேஸர் ஸ்டைலுக்கு மாற்றப்பட்டுள்ளது.

முரட்டு டயர்கள்
இந்த கஸ்டமைஸ் மாடலில் அகலமான டயர்கள் பொருத்தப்பட்டு, முரட்டுத் தோற்றம் கொடுக்கப்பட்டுள்ளது.

மேட் ஃபினிஷ்
பெட்ரோல் டேங்க் டிசைனிலும் மாற்றங்கள் செய்யப்படவில்லை. ஆனால், மேட் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.

பேட்டரி அறை
இருக்கைக்கு கீழே பேட்டரி உள்ள இடம் வலை கொடுக்கப்பட்டு, அதில் 750 என்ற எண்கள் மாடலை குறிப்பிடுவதற்காக பதியப்பட்டுள்ளன.

பின்புற டிசைன்
பின்புறத்தில்தான் மாற்றங்களை நிகழ்த்தியுள்ளனர். புதிய சிங்கிள் இருக்கை மூலம் கஃபே ரேஸர் டிசைனுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் உங்களுக்கு பிடித்திருக்கின்றதா, கருத்துக்களை எழுதுங்கள்.


Click it and Unblock the Notifications








