புதிய சூப்பர் பைக் ஷோரூம் திறக்கும் மஹேந்திர சிங் டோணி!

By Saravana

பைக் காதலரான டோணி ஏற்கனவே டுகாட்டி, ஹெல்கேட், பிஎம்டபிள்யூ என 30க்கும் மேற்பட்ட சூப்பர் பைக்குகளை வீட்டில் வரிசைக்கட்டி நிற்க வைத்துள்ளார்.

இந்த நிலையில், தனது சொந்த ஊரான ராஞ்சியில் புதிய சூப்பர் பைக் ஷோரூம் திறக்க முடிவு செய்துள்ளார். இதற்கான பணிகளிலும் அவர் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.


ஷோரூம்

ஷோரூம்

ராஞ்சியில் இருக்கும் ஹைதல் பகுதியில் புதிய ஷோரூம் அமைக்க முடிவு செய்துள்ளார். இதற்கான பணிகளையும் துவங்கி விட்டார்.

 அடுக்குமாடி கட்டடம்

அடுக்குமாடி கட்டடம்

ஹைதல் பகுதியில் கட்டப்பட்டுள்ள வணிக வளாகத்தில் புதிய பைக் ஷோரூம் அமைக்கப்பட உள்ளது. அந்த இடத்தில் தற்போது போர்வெல் போடும் பணிகள் நடக்கிறது.

அனுமதிக்காக வெயிட்டிங்

அனுமதிக்காக வெயிட்டிங்

புதிய சூப்பர் பைக் ஷோரூமை பதிவு செய்வதற்கான முயற்சிகளையும் டோணி மேற்கொண்டுள்ளார். விரைவில் அனுமதி கிடைத்தவுடன் ஷோரூம் அமைக்கும் பணிகளை முழு வீச்சில் துவங்க திட்டமிட்டுள்ளார்.

ரேஸ் டீம்

ரேஸ் டீம்

தனது பெயரில் சூப்பர் பைக் ரேஸ் அணியையும் டோணி நடத்தி வருகிறார்.

பணக்கார வீரர்

பணக்கார வீரர்

உலக அளவில் ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள அதிகம் சம்பாதிக்கும் டாப்- 100 விளையாட்டு வீரர்களில் டோணி 22வது இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 17, 2014, 10:10 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+