விரைவில் புதிய 150சிசி டிஸ்கவர் பைக்கை களமிறக்கும் பஜாஜ்!

பல்சர் மற்றும் டிஸ்கவர் வரிசையில் தொடர்ந்து பல புதிய மாடல்களை பஜாஜ் ஆட்டோ களமிறக்கி வருகிறது. டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் 400எஸ்எஸ் மற்றும் 400சிஎஸ் ஆகிய இரு புதிய பவர்ஃபுல் பல்சர் பைக்குகளை காட்சிக்கு வைத்திருந்தது.

அதில், ஃபேரிங் பேனல்கள் கொண்ட மாடல் தற்போது சோதனை ஓட்டத்தில் இருக்கிறது. இந்த நிலையில், டிஸ்கவர் வரிசையில் அதிக சக்திவாய்ந்த பைக்கை விரைவில் விற்பனைக்கு கொண்டு வருகிறது பஜாஜ் ஆட்டோ.

Bajaj Discover

ஆம், இந்த புதிய பைக்கை காண அதிக காலம் காத்திருக்க வேண்டியதில்லை. அடுத்த மாதம் அந்த பைக் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. டிஸ்வர் எஃப்150 என்ற பெயரில் அந்த புதிய பைக்கை அறிமுகம் செய்ய பஜாஜ் ஆட்டோ திட்டமிட்டுள்ளது. இது செமி ஃபேர்டு வெர்ஷனாக இருக்கும்.

இந்த புதிய டிஸ்கவர் எஃப்- 150 பைக்கில் 14 எச்பி பவரை அளிக்கும் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இதுவும் பஜாஜ் ஆட்டோவின் வழக்கமான 4 வால்வுகள் கொண்ட ட்வின்ஸ்பார்க் தொழில்நுட்பம் கொண்ட எஞ்சின் என்பது குறிப்பிடத்தக்கது. முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக்அப்சார்பரும் கொண்டது.

டிஜிட்டல் திரை கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், எல்இடி பிரேக் லைட்டுகள், முன்புறத்தில் டிஸ்க் பிரேக்குகள் போன்றவை இதன் முக்கிய சிறப்பம்சங்களாக இருக்கும். பின்புறத்தில் டிஸ்க் பிரேக் ஆப்ஷனலாக வழங்கப்படும். யமஹா ஃபேஸர், சுஸுகி விரைவில் களமிறக்கும் ஜிக்ஸெர் பைக்குகளுடன் மோதும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 14, 2014, 16:30 [IST]
English summary
Bajaj is in the process of launching new and exciting bikes for the future they had recently revealed their most powerful Pulsar till date the Pulsar 400SS and Pulsar 400CS. The fully faired bike from the Indian manufacturer has been doing the rounds around their facility in Pune.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+