இந்திய பைக் வீக் திருவிழா: டிரைவ்ஸ்பார்க் டீம் பயணம்
வரும் 17ந் தேதி கோவாவில் இந்திய பைக் வீக் திருவிழா துவங்க உள்ளது. நாடு முழுவதும் பைக் பிரியர்கள் மத்தியில் பெரும் ஆவலைத் தூண்டியிருக்கும் இந்த திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த நிலையில், இந்திய பைக் வீக் திருவிழாவில் பங்கேற்பதற்காக டிரைவ்ஸ்பார்க் டீம் எடிட்டர்கள் ஜோபோ குருவில்லா மற்றும் கணேஷ் ஆச்சார்யா ஆகியோர் பைக்கில் பயணித்து கோவா சென்றடைந்தனர்.

பெங்களூரிலிருந்து பாகாபூர், யெல்லாப்பூர், அல்நவார், மொல்லேம் வழியாக 18 மணி நேரத்தில் கோவா சென்றடைந்தனர். பல்சர் 220 மற்றும் யமஹா எஃப்இசட் பைக்குகளில் சென்றுள்ள அவர்களுடன் எமது மும்பை நிருபர் அஜிங்கியாவும் இணைய உள்ளார்.
மும்பையிலிருந்து அவர் பைக்கில் பயணித்து கோவா வருகிறார். கோவாவில் நடைபெறும் இந்திய பைக் வீக் திருவிழா நிகழ்வுகளை இவர்கள் இணைந்து வாசகர்களுக்கு வழங்க உள்ளனர் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறோம்.


Click it and Unblock the Notifications








