பெங்களூரில் விற்பனைக்கு வந்தது புதிய ஹயோசங் அக்குய்லா 250சிசி பைக்!
டெல்லி ஆட்டோ எக்ஸ்போ மூலம் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட புதிய ஹயோசங் அக்குய்லா 250 பைக் பெங்களூரிலும் விற்பனைக்கு வந்துள்ளது.
பெங்களூரில், புதிதாக திறக்கப்பட்டிருக்கும் ஹயோசங் பைக் ஷோரூமில் இந்த புதிய பைக் அறிமுக நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் டிஎஸ்கே ஹயோசங் தலைவர் சிரிஷ் குல்கர்கனி, நடிகர் பிரஜ்வால் தேவ்ராஜ் மற்றும் ஷோரூமின் முதன்மை அதிகாரி சுனில் ஆகியோர் பங்கேற்றனர்.

பெங்களூரில் புதிய ஷோரூம் விபரம்
பெங்களூரில் சர்ஃபெர்ஸ் ஆட்டோமோட்டிவ் என்ற புதிய ஹயோசங் ஷோரூமில்தான் இந்த புதிய க்ரூஸர் பைக்கின் அறிமுக நிகழ்ச்சி நடந்தது. இந்த புதிய ஷோரூம், ஜெயநகர், 9வது பிளாக்கில் இன்னர் ரிங் ரோடு, ஈஸ்ட் என்ட் ரோடு என்ற முகவரியில் அமைந்துள்ளது. பெங்களூரில் இது இரண்டாவது ஹயோசங் ஷோரூமாகும்.

அக்குய்லா 250 எஞ்சின்
அக்குய்லா 250சிசி பைக்கில் 249சிசி வி ட்வின் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இதில், 5 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டுள்ளது.

எஞ்சின் பவர்
இந்த பைக் எஞ்சின் 26.21 பிஎச்பி ஆற்றலையும், 21.37 என்எம் டார்க்கையும் அளிக்கும் வல்லமை கொண்டது.

வடிவம்
அக்குய்லா 250சிசி பைக் 2,282மிமீ நீளமும், 875 மிமீ அகலமும், 1096மிமீ உயரமும், 1,515 மிமீ வீல்பேஸ் கொண்டதாகும். 179 கிலோ எடை உடையது.

பிரேக்
முன்புறத்தில் 16 இஞ்ச் சக்கரமும், பின்புறத்தில் 15 இஞ்ச் சக்கரமும் பொருத்தப்பட்டிருக்கிறது. இதேபோன்று, முன்சக்கரத்தில் சிங்கிள் டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் டிரம் பிரேக்கும் பொருத்தப்பட்டு இருக்கிறது.

விலை
அக்குய்லா 250 பைக் ரூ.2.70 லட்சம் பெங்களூர் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








